வள்ளலார்”

 வள்ளலார்”

வள்ளலார்”

அருட்பெருஞ் ஜோதியும்
அவரே தான்.

தனிப்பெருங் கருணையும்

அவரே தான்.

ஆன்மிகக்
கடலில்
முத்தெடுத்து

அணிகலனாக
அதைத்
தொடுத்து

“திருவருட்பா”
என்னும்
பொக்கிஷத்தை

அருளிச்
செய்த
வள்ளல் தான்.

ஆன்மிக
உலகின்
சாரத்தைப்

பிழிந்து
தந்த
இம்மாமுனிவன்

ஜோதி
வடிவில் பரம்பொருளை

நமக்குக் காட்டிக் கொடுத்த
கடவுள் தான்.

சன்மார்க்க
சங்கம்
உருவாக்கி

ஜீவ
காருண்யம்
போதித்து

ஜாதிப்
பிரிவினை
முற்றிலும் அகற்றிய

அருட்
பிரகாசரும்
இவரே தான்.

அன்ன
தானத்தின்
மகத்துவத்தை

நன்குணர்த்திய
இவ்வள்ளல்
பிரான்

அதை
மக்களுக்குப் போதித்து

பசிக்
கொடுமையை
விரட்ட வந்தார்.

இராமலிங்கம்
என பெயர்
கொண்டு

தன் வாழ்வைத்
துவங்கிய
இவ்வருளாளர்

ஆன்மிகத்தின்
கரையைத்
தொட்டு

இன்று
வள்ளலாராக ஒளிர்கின்றார்.

இருநூறு
ஆண்டுகட்கு
முன்பாக

இவர் பூத
உடலில்
அவதரித்து

நற்
போதனைகள் பல
உபதேசித்து

வெறும் ஒளியாய் மறைந்தது
அதிசயந்தான்.

“கடை
விரித்தேன்,
கொள்வாரில்லை”

என்று தன் வாழ்வின் இறுதியில் உரைத்த இவர்

சொல்லிக்
கொடுத்த பாடம் பயின்று

சுத்த சன்மார்க்க வழியில் சென்றிடுவோம்.

அவர் அருளைப்
பெற்று மேலே உயர்ந்து

அருட்பெருஞ் ஜோதியில்

கலந்திடுவோம் 🙏

அன்புள்ள
பி வி வைத்தியலிங்கம்

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...