கேப்டனை வைச்சி செய்யும் போட்டியாளர்கள்!| தனுஜா ஜெயராமன்
இந்த ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே கடுமையான போட்டியும் பொறாமையும் காணப்பட்டது.
இந்த வார கேப்டனாக விக்ரம் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டது விஷ்ணுவுக்கும் விஐய்க்கும் காண்டாக ஆகிவிட்டது. மேலும் அவர்களை சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பிய கோபம் வேறு.
விக்ரம் சரவணன் அமைதியானர் என்பதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை நோண்டி நொங்கெடுத்து திணறடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனின் விஷ கொடவுனாக செயல்படுகிறார் விஷ்ணு. அவரோடு மாயாவும், விஜய் வர்மாவும் கூட்டணி சேர்ந்து வெறுப்பேற்றி வருகின்றனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் சரவணனோ மிகவும் திண்டாடி தவித்து வருகிறார்.
விக்ரமை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் மாறி மாறி வைத்து செய்து வருகின்றனர்.
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருபவர்களுள் தேவையில்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிகமாக வம்பு பேசும் மாயாவை இந்த வாரம் வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்களின் வெறுப்பை அவர் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
ப்ரதீப் எப்போது எப்படி ரியாக்ட் செய்வார் என்றே தெரியவில்லை. விஷ்ணு கடந்த சீசன் பாலாஜி மற்றும் அசீமை காப்பியடிக்கிறார். விஜய் வர்மா கன்னிங் கொடவுனாக தெரிகிறார். இந்த சீசனின் டிஸ்கஸ்டிங் கேரக்டராக மாயா.. அவரோடு ஒத்து ஊதும் பூர்ணிமா. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் ஜோவிகா. தண்டமாய் வினிஷா, ஆரியாக மாற நினைக்கும் விசித்ரா, வெறும் பார்வையாளராக யுகேந்திரன் , மணி நெக்ஸனொடு மட்டும் வரும் ரவீனா, வெறுமனே ஐஷூ, கூலாக எதையாவது பேசியபடி கூல் சுரேஷ், நேற்றிலிருந்து மட்டும் போட்டியில் கலந்து கொண்ட அக்ஷயா என வரும் நாட்களில் எப்படியிருக்கும் பிக்பாஸ் வீடு என பார்க்கலாம்.