இன்றைய ராசி பலன் (12 அக்டோபர் 2023 வியாழக்கிழமை)

 இன்றைய ராசி பலன் (12 அக்டோபர் 2023 வியாழக்கிழமை)

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிடவும். உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்தி பலன் காணலாம். இன்று பணியிடச் சூழல் சவால் நிரம்பியதாக இருக்கும். பணவரவு சமாராக இருக்கும். இன்று குடும்ப நாளுக்காக செலவு செய்வீர்கள். அதனால் கையில் இருப்பு குறைவாக இருக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எப்பொழுதும் உறுதியான மனநிலையுடன் இருங்கள். நீங்கள் ஓய்வாகவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். இன்றைய நாளை சாதுர்யமாக நிர்வகியுங்கள். இன்று அதிக பணவரவு எதிர்பார்க்க முடியாது. செலவுகள் அதிகமாக காணப்படும். பிரார்த்தனை அல்லது தியானம் சரியான அணுகுமுறை மேற்கொள்ள உதவும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணம் வரவிடாதீர்கள். அதிக வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

மிதுனம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதியமனிதர்களை இன்று சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இன்றைய தினத்தை பயன்ப்டுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலனைத் தரும். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு பணத்தை பயன் படுத்தி மகிழ்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கடகம் : எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள். இன்று வரவும் செலவும் இனைந்து காணப்படும். திட்டமிட்டால் இன்றைய தினம் உங்கள் கற்பனையை விட சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் இன்றைய நாளை சுமுகமாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

சிம்மம் : இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். யோகா / தியானம் மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளின் இயல்பு காரணமாக இன்று நீங்கள் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் கையிலிருக்கும் பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். வெயிலில் அதிகமாக சுற்றாதீர்கள். அதிக நீரைப் பருகுங்கள்.

கன்னி : எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிடுங்கள். நற்பலன்கள் பெறலாம். உங்கள் சக பணியாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரேயடியாக வேலையில் மூழ்கி விடாதீர்கள். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். இன்று எந்த முக்கிய முடிவும் எடுப்பது சிறந்ததல்ல.

துலாம் : இன்றைய தினம் செழிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க விரும்பினால் இன்று உகந்த நாள். பூவைப் போல புத்துணர்ச்சியோடு சிறப்பாக இருப்பீர்கள். பணத்தைப் பொருத்தவரை திருப்திகரமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காக பணத்தை விருப்பமுடன் செலவு செய்வீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று நேர்மறை எண்ணத்துடன் இருப்பதால் திடமாக இருப்பீர்கள.

விருச்சிகம் : இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை அளிக்கும். இன்று பணிகள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சி யான மன நிலையில் இருப்பீர்கள். அதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும்.

தனுசு  :   நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக அணுக வேண்டும். பதட்டப் படுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். மனது ஒருமித்து நேரா நேரத்தில் பணிகளை ஆற்றினால் சிறப்பாக இருக்கும். உணவு முறையில் கவனம் செலுத்தவும். இன்று அதிக பண வரவு இருக்காது உங்களிடம் இருக்கும் பணத்தில் கவனமாகவும் பயனுள்ள விஷயங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் முழு அளவு சாதகத்தை அளிக்காது. தியானம் மேற்கொண்டு அமைதியாக இருபதன் மூலம் குழப்பங்களைத் தீர்க்க முடியும். நீங்கள் செய்யும் செயலில் கவனம் தேவை. பணியில் கவனமாக இருக்கவும். பெரிய அளவிலான கொள்முதல் செய்வதை தவிர்க்க முயலுங்கள். இன்று நிதியை சிறப்பாக நிர்வகியுங்கள். இன்று ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும்.

கும்பம் : இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அவை உங்களுக்கு சாதமாக இருக்கும். இன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். உங்கள் சேமிப்பு உயரும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும். திறமையாகப் பணியாற்றி அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெறுவீர்கள்.

மீனம் : உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நீங்கள் உணரும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள. நீங்கள் பணியாற்றும் முறையை கண்டு உங்கள் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். இன்று அதிக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனை உங்கள் சுய தேவைக்காக பயன்படுத்துவீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...