இஷ்டத்துக்கு பேசும் மாயா! முகம் சுளித்த பார்வையாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

 இஷ்டத்துக்கு பேசும் மாயா! முகம் சுளித்த பார்வையாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

பிக் பாஸ் 7 போட்டியாளரான மாயா கிருஷ்ணன் செய்தது மிகவும் தவறு என பலரும் கூறி வருகிறார்கள். அவர் நாமிஷேஷனுக்கு வந்தால் எலிமினேட் செய்ய பலர் காத்திருந்த நிலையில் அவரே வந்து தொக்காக மாட்டி கொண்டார்.

கூல் சுரேஷ் சாதாரணமாக பேசியதை பெரிய விஷயமாக்கினார் மாயா. நான் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன். கூல் சுரேஷ் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் பேசினாரே. அவர் மட்டும் எது வேண்டுமானாலும் பேசலாம், அதை இந்த பிக் பாஸ் கேட்க மாட்டாரா என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே பிரதீப் மீது கடும் கோபத்தில் இருக்கும் மாயா, அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் சுமால் பாஸ் வீட்டுக்குள் செல்ல மறுத்தார். அவரை பற்றி இஷ்டத்திற்கு பேசி வருகிறார்.

நேற்று வீட்டை பெருக்கி கொண்டிருந்த சக போட்டியாளர் நிக்சன் அப்பொழுது அவர் மாஸ்க் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு மாயாவோ தன் ஸ்போர்ட்ஸ் பிராவை தூக்கி பூர்ணிமாவிடம் காட்டி சிரித்தார். அதை பார்த்து பூர்ணிமாவும் சிரித்தார்.

மாயாவும், பூர்ணிமாவும் விழுந்து விழுந்து சிரிக்க அதன் காரணம் தெரியாத நிக்சன் அவர்பாட்டுக்கு கூட்டினார். மாயா செய்த காரியத்தை நிக்சன் பார்க்கவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் எல்லாம் கவனித்து முகம் சுளித்தனர்.

இந்த குறும்பட வீடியோவும் வைரலாகி வருகிறது. எது வேண்டுமானாலும் செய்யலாம், நம்மை தட்டிக் கேட்க ஆள் இல்லை என நினைக்கும் மாயாவுக்கும் ஒரு ஸ்டிரைக் கார்டு கொடுக்க வேண்டும் என கமல் ஹாசனிடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வாரம் மாயாவை அனேகமாக பார்வையாளர்கள் வெளியேற்றுவார்களா? பிக்பாஸ் அவரை காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...