முதல் நாளே போட்டியாளர்களை வைச்சு செய்த பிக்பாஸ்..! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியது. போட்டியின் முதல் நாளான நேற்றே களை கட்டியது பிக்பாஸ் வீடு.

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவரான விஜய்க்கு முதல் நாளே டாஸ்க் ஆரம்பித்து விட்டது. அவரை அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத ஆறுபேரை போட்டு கொடுக்க சொல்லி பிக்பாஸ் பரிந்துரைத்தார். வினுஷா தேவி, ரவீணா, பவா செல்லதுரை, ஐஷூ, அனன்யா, நிக்சன் உள்ளிட்டோர் கேப்டன் விஜய்வர்மாவால் பரிந்துரைக்கபட்டனர்.

விஜய் கொஞ்சமும் தாமதிக்காமல் முதல் நாளே தனது பக்காவான ஆட்டத்தை துவங்கினார். பவா செல்லதுரை , நிக்சன் , ரவீணா உட்பட ஆறு பேரை அவர் பங்கமாக போட்டு கொடுக்க, பிக்பாஸ் உடனே அவர்களை பக்கத்து வீட்டுக்கு ஜாகையை மாற்றி உத்தரவிட்டார்.

அத்தோடு மட்டுமல்ல ஒரு பக்கெட் லிஸ்ட அல்ல அண்டா லிஸ்டாக பல டிவிஸ்டுகளை விதிமுறைகளாக போட்டு முதல் நாளிலேயே கன்டஸ்டன்டுகளை கதற விட்டார்.

பெரிய வீட்டிலுள்ளவர்களை சின்ன வீட்டில் இருப்பவர்களும், சின்ன வீட்டு ஆட்களை மற்ற பெரிய வீட்டு நாமினேட் செய்ய வேண்டுமென குண்டை தூக்கி போட்டார்.

இதில் சின்ன வீட்டிலிருந்த நிக்சன் நாமினேஷனில் தப்பியது குறித்து ஒரு குட்டி விவாதம் வேறு அங்கேயே அரங்கேறியது.

வனிதா மகள் என்பதாலா? இல்லை உண்மையாகவே டாமினேட்டிங் ஆளா ஜோவிகா? என சரியாக தெரியவில்லை. ஆனால் பலரும் அவரை கட்டம் கட்டி நாமினேஷனில் தள்ளி அழகு பார்த்தனர்.. அழகில் பாதி ஶ்ரீதேவியும் பாதி பரீத்தாவுமாக கலந்து கட்டி இருக்கிறார் ஜோவிகா.

ப்ரதீப் பாதி அபிஷேக்காக பாதி அசீம்மாக மாறி லொட லொடக்கிறார்… நாட்டாமை செய்கிறார்.

வீணா தன்னை இன்னொரு ஒவியாவாக உருமாற்றம் செய்ய பெரும் பாடுபடுகிறார்.

வீட்டின் தலைவரான விஜய் வர்மா ஏனோ வயதுக்கு மீறி கன்னிங் லுக் தருகிறார். விஜய் பவா செல்லதுரை அவர்களை கொஞ்சம் டார்க்கெட் செய்வதாக தோன்றுகிறது.

பவா செல்லதுரை பற்றி அந்த வீட்டில் பலரும் அறிந்திருக்கவில்லை என்பது அவர் பெயரை பலரும் தப்பும் தவறுமாக உச்சரிப்பதிலேயே தெரிகிறது. பவா ஏனோ ரெஸ்ட்லெஸாக தெரிகிறார். ஏதோ ஒரு சங்கடம் அவர் முகத்தில் அப்பட்டமாக.. இன்னும் அந்த வீட்டில் அவர் கம்பர்ட்ஜோனுக்குள் வரவில்லை என தெரிகிறது. வழமை போலவே கதை சொல்லி அனைவரையும் கவர்கிறார்.

பார்ப்பதற்கு படுகூலாக தெரியும் கூல் சுரேஷ் மற்றவர்களை சூடேற்றுவதில் படு கில்லாடி. கூல் சுரேஷ் வரும் நாட்களில் அபிஷேக், ஜூலி, காயத்ரி ரகுராம் என பல கிஜ்லி பிஜிலிகள் சேர்ந்த கலவையாக மிளிர்வார் என எதிர்பார்க்கலாம். நிச்சயமாக மீம் கிரியேட்டர்கள் மற்றும் கண்டண்ட் கிரியேட்டர்களின் தெய்வமாக இருப்பார் சில பல வாரங்கள் என்பது நிச்சயம்.

இந்த சீசனின் விஷபாட்டில் யார் என்பதெல்லாம் வரும் நாட்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். பிக்பாஸும் பல்வேறு டாஸ்குகள் மூலம் பல நல்லவர்களை நமக்கு ஈயம் பித்தாளை என விளக்கி அடையாளம் காட்ட தான் போகிறார். இந்த சீசனின் லைலா மஜ்னு யார் என்பதும் ரசிகர்களின் ஏகோபித்த பேராவல் எனலாம். இந்த சீசனின் அன்பு குழுமத்தின் பாசப்பறவைகள் யாரென சற்று நாளில் அறிந்து கொள்ளலாம். மொத்தத்தில் யார் யார் எந்தெந்த கேரக்டரில் ப்ளே பண்ண போகிறார்களென தினமும் 9.30 மணிக்கு விஜய் டிவியிலோ ஹாட்ஸ்டாரிலோ கண்டு களிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!