ஆதி குணசேகரன் ஆக ப்ரோமோவில் வந்த “அந்த” ப்ரபலம்…

 ஆதி குணசேகரன் ஆக ப்ரோமோவில் வந்த “அந்த” ப்ரபலம்…

ன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இத்தனை நாட்களாக குணசேகரன் வருகிறார் வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இன்று குணசேகரன் மீண்டும் வீட்டிற்கே வருகிறார்.அதே நேரத்தில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற ரகசியத்தை இன்றைய பிரமோவில் உடைத்திருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து காலமானத்திற்கு பிறகு அடுத்த குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் சீரியல் தரப்பில் இருந்தும் ஆரம்பத்தில் குணசேகரன் கேரக்டரில் இனி யாரும் இல்லை என்பது போன்று பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாட்கள் செல்ல செல்ல குணசேகரனாக புது நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் குணசேகரன் வீட்டை விட்டு வெளியே போனதற்கு காரணம் ஈஸ்வரியும் அவருடைய குழந்தைகளும் தான் என்று வீட்டில் இருப்பவர்கள் திட்டிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் நேற்றைய எபிசோட்டில் ஈஸ்வரி தவறாக பேசிய கதிரை கன்னத்தில் பளார் என்று அடித்திருந்தார். அதை தொடர்ந்து இன்றைய எபிசொட்டில் நான் குணசேகரனை பார்க்க வேண்டும் அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லு என்று ஈஸ்வரி கதறி அழுதார்.

அதுபோல குணசேகரனை கதிர் தான் சொத்துக்காக ஏதோ செய்து விட்டார் என்று ஜனனியும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் நாளைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டிற்குள் ஒரு கார் வருகிறது. அதை பார்த்ததும் விசாலாட்சி எப்பா நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க? பெரியவனை எங்க என்று கதிர் மற்றும் ஞானத்திடம் கேள்வி கேட்கின்றனர்.

அதற்கு ரேணுகா, “என்ன இந்த முறை சாப்பாட்ட கவளமா உருட்டி கொடுத்தாரா? சாப்பிட்டுட்டு மயக்கத்துல வந்துட்டீங்களா?” என்று கேள்வி கேட்க, அதற்கு ஞானம் அண்ணனை பார்த்துட்டு தான் வரோம் என்று சொல்கிறார். அதற்கு நந்தினி “செருப்பை பார்த்தோம், குரலை கேட்டோம் என்று ரியாக்ஷன் தான் ஓடிக்கிட்டு இருக்கு, ஆக்ஷனை காணுமே” என்று சொல்ல, கதிர் போனில் அண்ணே ஆக்ஷனை பார்க்கணுமாம் காட்டுவோமாண்ணே..?” என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து ஆதி குணசேகரன் காரிலிருந்து இறங்குகிறார். அதற்கு கரிகாலன் உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்க இதோ வந்துட்டாருல என் மாமா ஆதி குணசேகரன் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் அந்த ப்ரோமோவில் ஆதி குணசேகரனாக நடிகர் வேல ராமமூர்த்தி அறிமுகம் ஆகிறார். இது நாளை எபிசோட்டில் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இப்போதும் யார் வந்தாலும் சரி எங்கள் மனதில் மாரிமுத்து சார் மறையவில்லை என்று பலர் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...