பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்களின் விவரம்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியுடன் பட்டையை கிளப்பும் பர்ஃபார்மன்ஸை கொடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 18 பேர் பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
1. கூல் சுரேஷ்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நபராக உள்ளே நுழைந்திருப்பது வெந்து தணிந்தது காடு பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என அதகளப்படுத்தும் போட்டியாளர் கூல் சுரேஷ் தான். கமல் கூல் சுரேஷுக்கு சுரேஷ் என்கிற பெயர் போட்ட டாலரை பரிசாக வழங்கி உள்ளே அனுப்பி வைத்தார். முதல் கேப்டன் என பிக் பாஸ் ஆசைக்காட்டி கூல் சுரேஷை முதல் நாளிலேயே மோசம் செய்து விட்டார்.

2. பூர்ணிமா ரவி: டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி நரிக்கூட்டம் யூடியூப் சேனல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அராத்தி எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து இவர் செய்த காமெடி சேட்டைகள் பலரையும் ஈர்த்து சில குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தன. பிக் பாஸ் வீட்டுக்கு 2வது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார்.

3. ரவீனா தாஹா: 3வது போட்டியாளராக மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹா உள்ளே நுழைந்துள்ளார். ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்த இவர் ஏகப்பட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.19 வயதான ரவீனா தாஹா இந்த சீசனில் இளைஞர்களை எப்படி ஈர்க்கப் போகிறார் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

4. பிரதீப் ஆண்டனி: 4வது போட்டியாளராக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அருவி படத்தின் உதவி இயக்குநரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி வாழ், டாடா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து பெருசா சாதிக்க முடியாத நிலையில், கவினின் நண்பரான இவர் பிக் பாஸ் பிளாட்ஃபார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

5. நிக்ஸன்: போன சீசனில் ஏடிகே உள்ளே சென்றதை போல இந்த சீசனிலும் பாட்டுப் பாட ஒருத்தர் வேண்டும் என்பதால் ராப் பாடகர் நிக்ஸனை உள்ளே 5வது போட்டியாளராக அனுப்பி உள்ளார்கள். ஒத்த தாமரை பாடலை பாடியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6. வினுஷா தேவி: பாரதி கண்ணம்மா 2 சீரியல் பாதியிலேயே நின்ற நிலையில், வாய்ப்புத் தர நாங்க இருக்கோம் என பிக் பாஸ் வீடு நடிகை ரோஷ்னி ஹரிப்ரியனை தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவியை 6வது நபராக உள்ளே அனுப்பி உள்ளனர்.

7. மணிச்சந்திரா: அமீர், ராபர்ட் மாஸ்டர் வரிசையில் இந்த முறையும் நடன கலைஞர் ஒருவரை உள்ளே அனுப்பி உள்ளனர். மணிச்சந்திரா என்கிற இந்த போட்டியாளர் 7வதாக உள்ளே நுழைந்து உள்ளார். ரவீனா தாஹாவும் இவரும் நெருங்கிய நண்பர்களாம்.

8. அக்‌ஷயா உதயகுமார்: இந்த சீசனில் இளைஞர்களை கவர ஏகப்பட்ட மாடல்களும் சின்னத்திரை நடிகைகளும் களமிறங்கி உள்ளனர். லவ் டுடே படம் மற்றும் மலையாள படமான சித்தி படத்தில் இவர் நடித்துள்ளார். 8வது நபராக கமல்ஹாசனின் வாழ்த்துக்களை பெற்று பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் நுழைந்துள்ளார்.

9. ஜோவிகா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக களமிறங்கி உள்ளார். தனது மகளை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவது ரொம்பவே சந்தோஷம் என வனிதாவும் பேசியிருந்தார்.

10. ஐஷு: 10வது நபராக அமீரின் உறவினரான ஐஷு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். நடன கலைஞரான இவர் டான்ஸ் vs டான்ஸ் போட்டியிலும் ஏற்கனவே பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்கனவே ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பங்கேற்றுள்ளார்.

11. விஷ்ணு விஜய்: ஆபிஸ், சத்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமுல் பேபி விஷ்ணு விஜய் 11வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே கமல் சொல்லியும் கேட்காமல் அதிகம் பேசி வருகிறார்.

12. மாயா கிருஷ்ணன்: விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து ரசிகர்களை வசீகரித்த நடிகை மாயா கிருஷ்ணன் 12வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கமல் அவருக்கு ஜோக்கர் பொம்மை மூக்கை பரிசாக வழங்கினார். மாயா கிருஷ்ணன் ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13. சரவண விக்ரம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சரவண விக்ரம் எப்படியாவது ஹீரோவாகி விடலாம் என்கிற முயற்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் 13வது நபராக நுழைந்துள்ளார். அவரது குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என இரண்டு குடும்பம் வந்து அவரை வாழ்த்தி உள்ளே அனுப்பினர்.

14. யுகேந்திரன்: பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் 14வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். பாடல்களை பாடி விட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

15. விசித்ரா: முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்த விசித்ரா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி புராடக்ட்டாகவே மாறிய நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு 15வது நபராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

16. பவா செல்லதுரை: பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை இந்த முறை திடீர் சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டுக்குள் 16வது போட்டியாளராக நுழைந்திருக்கிறார். ஒவ்வொரு புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள தனக்குப் பிடிக்கும் எனக் கூறிய எழுத்தாளர் சிதம்பர நினைவுகள் புத்தகத்தையும் பரிந்துரை செய்தார்.

17. அனன்யா ராவ்: கன்டென்ட் க்ரியேட்டரான அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டுக்கு 17வது போட்டியாளராக அசத்தல் என்ட்ரி கொடுத்தார். நெட்பிளிக்ஸின் இன் ரியல் லவ் சீரிஸ் மூலம் பிரபலமானவர். இவரும் இவரது தங்கையும் ட்வின்ஸ் என்பதால், யார் ஒரிஜினல் போட்டியாளர் என்றே கமல் சிறிது கேம் விளையாடி பின்னர் அனன்யா ராவை உள்ளே அனுப்பினார்.

18. விஜய் வர்மா: 18வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் விஜய் வர்மாவும் ஒரு நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல கடைசியாக சென்ற விஜய் வர்மாவுக்கு முதல் வாரத்துக்கான பிக் பாஸ் கேப்டன்ஸி பொறுப்பு கிடைத்துள்ளது. முதல் வாரத்தில் இவரை எலிமினேட் செய்ய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!