இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை 02 அக்டோபர் 2023)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 02.10.2023, சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 11.28 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று இரவு 10.58 வரை பரணி. பின்னர் கிருத்திகை. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையை காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் டென்ஷன் அடைவீர்கள்.

ரிஷபம்: அவசியமான காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சச்சரவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள்.

மிதுனம் : நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலையை உருவாக்குவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு பெறுவீர்கள்.

கடகம் : தடையில்லாமல் காரியங்கள் செய்வீர்கள். தன வரவை பெருக்குவீர்கள். புதிய பெண் நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளாவிட்டால் அவமானம் அடைவீர்கள். இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வயிற்றில் ஏற்பட்ட சின்ன பிரச்சனைக்காக ஸ்கேன் பண்ணி மருத்துவரை சந்திப்பீர்கள்.

சிம்மம் : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். பின்னர் தேவையற்ற பிரச்சனைகளை விலக்கி நிம்மதி அடைவீர்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப்பணியில் இடமாற்றம் ஏற்பட்டு வேறு ஊருக்குச் செல்வீர்கள். வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளில் தாமதத்தை எதிர்நோக்குவீர்கள்.

கன்னி : கூட்டு வியாபாரத்தில் கொஞ்சம் விழிப்போடு நடந்து கொள்ள தவறாதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையுடன் செயல்பட மறக்காதீர்கள். சின்ன விபத்துகளில் மாட்டிக்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் நாள். கவனமாக இருங்கள்.

துலாம் : கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத பண வரவு அடைவீர்கள். திருமண விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பீர்கள். உயரதிகாரிகள் தரும் உற்சாகத்தால் பணியிடங்களில் பரபரப்பாக வேலை செய்வீர்கள்.

விருச்சிகம் : “நெஞ்சம் உண்டு… நேர்மை உண்டு… ஓடு ராஜா” என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள்.

னுசு : உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு குடி பெயர்ந்து செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்றாக உணர்ந்து கொள்வீர்கள்.

மகரம் : தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையை தீர்ப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து நெருங்கிய நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்வீர்கள்.

கும்பம் : “போனால் போகட்டும் போடா” என்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் அன்பை புரிந்து கொள்ளாததால் மன வேதனைப்படுவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பிக்கை துரோகத்தால் உள்ளம் கலங்குவீர்கள். அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மீனம் : “காசேதான் கடவுளப்பா” என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தால் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். வருமானம் பெருகி மன மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்குவீர்கள். நண்பர்களின் ஒத்தாசையை பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!