பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு!

 பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். யூடியூபர் டிடிஎப் வாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யூடியூபர் டிடிஎப் வாசன் அங்கே ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.

அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...