இசையமைப்பாளர் & நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

 இசையமைப்பாளர் & நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னயைில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.

இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.

நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியுள்ளார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...