மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மசோதா கொண்டுவரப் போவதை எதிர்பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.