மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! | தனுஜா ஜெயராமன்
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு எம்பிக்கள் குழு இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை இன்று சந்திக்கிறது.
அப்போது தமிழகத்தின் கோரிக்கை குறித்த மனுவை அளிப்பதுடன், காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு, காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. அடுத்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெறும். காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவதை கூட கர்நாடக ஏற்க மறுக்கிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்.