தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி
தக்காளி, காய்ந்த மிளகாய் வேண்டாம்.. சுவையான கார சட்னி எப்படி செய்வது
உள்ளி கார சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
வெங்காயம் – 3
பூண்டு – 10 பல்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெல்லிக்காய் அளவு புளி
கொத்தமல்லி – சிறிது
கடுகு – 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து அது சூடானதுடன் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு சேர்ந்து நன்கு கலக்கிவிட வேண்டும்.
அத்துடன் வெங்காயம், மிளகாய்தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பிறகு சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். அத்துடன் கொத்தமல்லி மற்றும் கறைத்து வைத்து இருக்கும் புளியை தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.
இறுதியாக ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அறைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும். அவ்வளவு தான் சுவையான, அருமையான ஆந்திரா உள்ளி கார சட்னி தயார்.