பேசும் புத்தகங்கள்/ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி

 பேசும் புத்தகங்கள்/ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி

பேசும் புத்தகங்கள்

இன்று

சமீபத்தில்  நான் படித்த  ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் .

ஆசிரியர்  பென்யாமின்

தமிழில்  விலாசினி

வெளீயிடு

எதிர் வெளியீடு ,  96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002.

 விலை  .ரூபா 300 , பக்கங்கள்  216.

தொலைபேசி   04259 226012, 99425 11302.

இந்த நாவல் 2009ன் கேரள சாகித்திய அகாதெமி  விருது பெற்றுள்ளது.

இந்த  மலையாள மொழி நாவலை எழுதிய  பென் யாமின் மலையாள இலக்கியத்தின் அற்புதமான ஒரு புதிய எழுத்தாளர் என சொல்லலாம் .மொழிபெயர்ப்பு  மாதிரி இல்லாமல் ஒரிஜனல் நாவலை படித்த மாதிரி மிகவும் அருமையாக  மொழி பெயர்த்துள்ள விலாசினி மிகவும் பாராட்டுக்குரியவர்.

முன்னுரை இல்லாதது திருப்தி, முன்னுரையை படித்தால் நாவலின் சுவை குன்றும் என்பது என்னோட தனிப்பட்ட அபிப்பிராயம்.

நான் இந்த நாவலை  படிச்சிட்டு  இன்னும் அந்த நாவலின் பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை ,

அந்த ஆடுகள் ,நஜீப் ,ஹக்கிம் ,இப்ராகிம் ,நபில்

இவர்களுடன் கலந்து விட்டேன் போல.

இன்னும் நான் அந்தபாலைவன மஸாராவில் தான் நான் இருப்பதை உணர்கிறேன்.

இப்படி ஒரு மஸாராவை பார்க்க வேண்டும் என தோன்றினாலும் அந்த அர்பாப்பை நினைத்தாலே குலை நடுங்குகிறது.

நஜீபின் அனைத்து அனுபவங்களை ஒரு அம்சம் தவறாமல் பென்யாமின் எழுதியிருக்கிறார்.

முதலில் நான் இந்த நஜீப் ஆசிரியராகதான் இருப்பார் என நினைத்தேன்.

கடைசியில் ஆசிரியர் குறிப்பைப் படித்த போதுதான் நஜிப் என்பவரின் உண்மை வாழ்க்கை சம்பவங்கள் என தெரிந்து கொண்டேன்.

.

பென்யாமின்   எழுத்து  நாமே அந்த பாலைவன மஸாராவில் இருப்பதை போலவும் அங்கிருந்து தப்பிக்கும் போது பாலைவனத்தின் சுய ருபத்தை காண்கிறோம்.

அங்கே நாம  வசிப்பது போலவே உணர்வோம்.

இந்த நாவலை  நான்கு பகுதிகளாக  கொடுத்துள்ளார்.

1 .சிறை  2. பாலைவனம் 3.   விடுதலை 4. அடைக்கலம்

மொத்தமாக  நாற்பத்தி மூணு அத்தியாயங்கள்.

மிக சிறந்த கல்ப்ப்  நாவல் என சொல்வேன்.

இந்த நாவலைப்பற்றி ,

பொருளாதார புலம் பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தைக் கருணையுடன் புரிந்து கொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் நாவலே முதலில் இருக்கும் .ஆனால் இந்த நாவல் அதைக்கடந்து மனிதனிலிருந்து விலங்கைப் பிரிப்பது எது என்றும் கேட்கிறது என்கிறார் , நிலஞ்சனா ராய் (பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்)

சில பக்கங்களை படித்தவுடன் நானே நஜீபாக  மாறிவிட்டேன் என சொல்வேன்.

அவரின் வலியை உணர்ந்தேன்.

இது போல எத்தனை பேர் அங்கே மஸாராவில் இருப்பாங்க.

அந்த குபூஸ் சாப்பிட்டுக்கொண்டும், அந்த பச்சை ஆட்டுப்பாலை தினமும் குடித்துக்கொண்டும் பல வருடங்களாக குளிக்காமலும்  மயிர் நீக்காமலும்

மிக் கொடுமை,

இது படிச்ச உடனே நானே மிரண்டு போய் இரண்டு நாட்களாக சாப்பிடக்கூட முடியல என்னால,

 இது ஒரு எக்ஸாம்பிளா கூட இருக்கலாம்,

அவங்களுடைய இரண்டு பக்கத்தை உணரலாம்,

இன்னொன்று  மனுசனும்  மிருகங்களு,ம்க்கும் வாழ்க்கை  ஒரே மாதிரி தான் போல இருக்கு .

ஒரு மனுசன் விலங்க மாறி மனுசனை அடக்கறான் ஆனா எந்த விலங்குகளும் மனசனை அடக்குவதில்லை

பின் மிருக எதிர்ப்பு  ஏன்  தெரியல

 ஆனா உண்மையில்  விலங்குகன் மனிதர்களுடன் நட்பு பாராட்டத்தான் செய்கின்றன.

ஆனா மனிதர்கள் மனிதர்களை உணர்வதில்லை . நட்பாகவே இருப்பதில்லை

அவர்கள்  மனசு விலங்குகளை விட கேராமானது தான் என்பதை இந்த நாவலை படித்தால் உணரலாம்.

இந்த உண்மை கதை பற்றி நசீப் சொல்றார், எப்போதும் நடந்தவை நான் ஏற்கனவே மறந்துவிட்டேன் .

அவர்க  கதையை  ஆசிரியர்  உள்வாங்கிக் கொண்டு  நாவலை எழுதி  இருப்பதை பார்த்தால் இந்த ஆசிரியரின் உண்மை கதையோ என முதலில் நினைத்தேன்

 வளைகுடா வாழ்க்கை  ,இருண்டுள்ளதா நம்ப முடியல என ஆசிரியர் சொல்வதை நாமளும் நம்ப முடியவில்லையே  என ஆசிரியர் போல நினைக்கிறோம்

வாழ்க்கையில் இத்தனை துன்பங்கள் அனுபவித்திருந்த ஒரு மனிதனின் அனுபவம் அவருக்கு சுவாரசியமாகி எத்தனை லட்சம் மனிதர்கள் கல்ப்பில் வாழ்கிறார்கள் எத்தனை லட்சம் பேர் வாழ்ந்து தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி உள்ளார்கள் பாலைவனத்தின் தீவிரத்தை முழுமையாக  இந்த நஜீபி ன்  கதை மட்டும் அல்ல இது நிஜமான வாழ்க்கை ஓர் ஆட்டின்  வாழ்க்கை என உணர முடிகிறது .

 சிறை  வாழ்க்கை தேவலை என சொல்லும் அளவுக்கு  பாலைவன வாழ்க்கையின் கொடுரம்.

 இந்த நாவலின் ஒவ்வொரு எழுத்தும் இந்த நாவலை சுவாரஸ்யம். ஆக்கினாலும்  எத்தனை மர்மங்கள் இதில் மறைந்துள்ளது எத்தனை அழிவுகள்  தேங்கப்போகிறதே என நம் மனம் கவலை கொள்வது நிஜமே.

 வாழ வேண்டும் என்பதற்காக சரி வந்துள்ளேன் என்றால் அப்படி ஆனால் அவன்  வாழ்ந்த பாலைவன வாழ்க்கை இப்படி  கொடுமையாக இருந்திருக்கும்  அவனாலே  முடியலையே

நாம் நினைத்து பார்க்கும் போது நம் கண்களில் நீர் துளிக்காமல் இருக்காது.

நஜீப் அந்த  அர்பாப் ,ஹக்கிம், இப்ராகிம்,  

இவர்கள் தான்  இந்த நாவலின் முக்கிய பாத்திரங்கள்.

 பாலைவனத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகை இதனை மஸ்ரா என்கிறார்கள்

இந்த ஆடுகளை மேய்த்தவன் கதை இதுதான்.

அவனின் 4 வருட இந்த கொத்தடிமை நாட்கள் தான் இந்த கதை

இதிலிருந்து அவன் எப்படி தப்பித்தான் .-?

 நாம் சினிமாவில்  பாலை வனக்காட்சிகளை பார்த்து ரசிக்கிறோம், .கதாநாயகன் கதாநாயகிகள் ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

மேற்கத்திய கௌபாய் படங்களில் வில்லன் கதாநாயகனை பாலை வனத்தில் விட்டு கொடுமைப்படுத்துவான்.

அப்படிலாம் கற்பனை ப்பண்ணிக்கொண்டு நாம் இருக்கிறோம்.

நிஜம் அப்படி அல்ல.

பாலைவனத்தின் அனைத்து அவஸ்த்தைகளை நிஜத்தில் கொண்டு வர அதை அனுபவித்தரால் தான் முடியும்.

அவர் தான் நஜீப்.

 நம் தேவைக்கு ஏற்ப தான் நமக்கு ஒரு கண்டுபிடிப்பு அவசியம் போல உண்மைதானே.

 கண்டுபிடிப்பின் பயன் என்பது ஒருவரின் தேவையும் உரிமையைக் கொண்டு தான் அளக்கப்படுகிறது எனில் நம்முடைய கண்டுபிடிப்பு மற்றதைவிட விட உயர்வது தானே.

இந்த நாவலை  படிக்கும்போது எனக்கு  நாவலாசிரியர் சொன்ன

இந்த கீழ்க்கண்ட  வார்த்தைகள்  அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது

அர்ப்பாப்

மஸாரா

மயின்

குபூஸ்

கனம்

ஹலிப்

திபின்

இந்த வார்த்தைகளை நேசித்தாலும் அந்த வார்த்தைகளுக்கு பின்னால் உள்ளது  என்ன சொல்கிறது நாவலை படியுங்கள்.

பாலைவனத்தில் நஜீப்  கருவுற்ற தாய்மானை பிரசவம் பார்த்து அதுக்கு பிறந்த ஆண் குட்டியை வளர்க்கிறான்  அதுக்கு நபில் என பெயர் வைக்கிறான் .

தன் குழந்தையை போல பராமரிக்கிறான்.

தாயும் அவனுக்கு நண்பனாகி பழகுகிறது

ஒரு கட்டத்தில் அர்பாப் நபிலை கொன்றுவிட அந்த துக்கக்காட்சி

அப்படியே மனதில் எனக்கு நின்றுவிட்டது.

இந்த நாவலை படித்து முடித்தப்பின் இதற்கு ஒரு விமர்சனம் எழுதிக் கொண்டு வந்தேன்.

நேற்று குடும்பத்துடன் சென்னை அருகே உள்ள ஒரு முருகர் கோயில் செள்றோம்.

கோயில் வாசலருகே ஆடுகளின் கனைப்பு.

திரும்பி பார்த்தேன்.

ஒரு ஆடு தன் இரண்டு குட்டிகளுடன் என்னை பின்தொடர,

அந்த  பெரிய ஆட்டின் பார்வை என்னிடம் எதிர்பார்த்து

குட்டி ஆடுகள் நபிலைப்போல வந்தன,

எனக்கும் இந்த ஆடுகளுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு இருக்கிறது போல,

பக்கத்தில் இருந்த கடையில் பிஸ்கட்டுகள் வாங்கி போட்டோம்.

அந்த படங்கள் தான் இது நாள் 31.8.2023

இன்று இந்த விமர்சனத்தை  தொடர்ந்த போது நபில் தான் வருது.

 நான் என்ன சொல்லி இந்த விமர்சனத்தை அல்லது  என் கண்ணோட்டத்தை நிறைவு செய்வது என தெரியல.

இந்த வரிகளுடன்,

நம் துயரங்களைப்பகிர வேறொருவர் இருந்தால் தான் நாம்  எத்தகைய துயரங்களையும் தாங்க முடியும்

தனிமை கொடுமையானது

என்னுடன் ஒன்றி விட்டது இந்த பேசும்  புத்தகம்.

கடைசி வரை அந்த குபூஸ்  உணவுனான என்ன வென்றுதெரியல.

இப்ப வரை  தெரிஞ்சுக்கவும் விரும்பல.

பென்யாமி அவர்களுக்கு நன்றி.

விலாசனி அவர்களுக்கும்.

—  உமாகாந்தன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...