இன்றைய ராசி பலன் சனிக்கிழமை 02 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் சனிக்கிழமை 02 செப்டம்பர் 2023)

மேஷம் : இன்று வெற்றிகரமான பலன்கள் காண உறுதியும் திட்டமிடலும் அவசியம். பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது. கவனக்குறைவு காரணமாக பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று வாய்ப்புக்கள் குறைந்து காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைவு.

ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் பணிகளை எந்த இடையூறும் இல்லாமல் மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை இன்று சிறப்பாக இருக்கும். சேமிப்பு நிலை சிறப்பக இருக்கும். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை காரணமாக சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மிதுனம் :  இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம் நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். பணியிடத்தில் முன்னேற்றகரமான சூழல் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். சுதந்திரமான நிதி நிலைமையும் நிதியில் ஸ்திரத்தன்மையும் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம் : இன்று பயணம் செய்வதில் முனைந்து இருப்பீர்கள். உங்களைச் சுற்றி மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.மற்றவர்களுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வது சிறந்த பலன் தரும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம் : இன்று நற்பலன் காண நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பயனுள்ளதாக இருக்கும். இறை மந்திரம் மற்றும் ஸ்லோகங்கள் கூறுவதன் மூலம் நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து மேற்கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். பணத்தை கையாளும்போது கவனமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். பணத்தை செலவு செய்யும்போது அதிக செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

கன்னி : இன்று நீங்கள் அதிக முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். இதனால் நீங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வீர்கள். கடினமான பணிகளையும் திட்டமிட்டு எளிமையாக மேற்கொள்வீர்கள். பணவரவு நிலையாகவும் அதிக அளவிலும் காணப்படும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

துலாம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். மறக்கமுடியாத தருணங்களை அனுபவிப்பீர்கள். சவாலான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் திறமை மூலம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். நீங்கள் கடினமான பணிகளையும் எளிமையாக ஆற்றுவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும். உங்களின் சந்தோஷமான மனநிலை காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியம் பராமரிப்பீர்கள்.

விருச்சிகம் : முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. இன்று உங்கள் செயல்களில் கவனம் கொள்ள வேண்டிய நாள். உணர்சிவசப்படுவதலை தவிர்க்க வேண்டும். செயல்களை திட்டமிட்டு மேற்கொண்டால் வெற்றி பெறலாம். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதனால் நீங்கள் கடன் வாங்க நேரலாம்.

தனுசு  :   இன்று சவால்கள் நிறைந்து காணப்படுவதால் சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பெறலாம். பணியின்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க பொறுமை அவசியம். தேவையற்ற செலவுகள் காரணமாக அதிக பணம் விரயமாகும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மகரம் :  இன்று உங்களுக்கு சீரான பலன்கள் கிடைக்கும் நாள்.இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். இன்று சுப நிகழ்சிகள் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது. பணியைப் பொறுத்தவரை முன்னேற்றகரமான பலனுக்கு சாத்தியம் உள்ளது. பணப்புழக்கம் சீராக இருக்கும். சேமிப்பு நிலை உயர்வதற்கான சாத்தியம் உள்ளது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று பதட்டமான மன நிலையில் காணப்படுவீர்கள். அதனால் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது கடினம். உங்கள் அன்றாட செயல்களை மேற்கொள்ளும்போது கவனம் தேவை. இன்று வீணான செலவுகள் காணப்படும். உங்கள் குடும்பத்திற்காக தேவையற்ற செலவுகளை செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும். குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது கடினமாக காணப்படும். உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் காணப்படும்.

மீனம் : இன்று நன்மை தீமை இரண்டும் கலந்த நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். எல்லா விஷயங்களிலும் பொறுமை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். பணியில் கவனக்குறைவு ஏற்படலாம். எனவே நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் கவனம் தேவை. இன்று அதிக செலவுகள் காணப்படும். உங்களால் முடிந்த அளவு சேமிக்க வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...