எல்பிஜி எரிவாயு இறக்குமதி வரி மற்றும் இன்ஃப்ரா செஸ்- ஐ மத்திய அரசு குறைப்பு! |தனுஜா ஜெயராமன்
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இது எரிவாயு நிறுவனங்களுக்கு பெரும் சுமையை உருவாக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு எல்பிஜி எரிவாயு மீதான இறக்குமதி வரி மற்றும் விவசாய மற்றும் இன்ஃப்ரா செஸ் ஆகியவற்றை மத்திய அரசு 15 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாக குறைத்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ஜீரோ சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) எரிவாயுவை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. மேலும் அரசு நிறுவனங்கள் மீதான விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) வரி நீக்கப்பட்டு உள்ளது மூலம் நடுத்தர மக்கள் பலன் அடைவார்கள். இந்த வார தொடக்கத்தில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் புதிய வரிக் குறைப்பு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு நிதி சுமையை குறைக்கும்.
ஜூலை 1 ஆம் தேதி, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கான அடிப்படை சுங்க வரியை 5% இல் இருந்து 15% ஆக அரசாங்கம் உயர்த்தியது. எல்பிஜி சிலிண்டர்களின் இறக்குமதிக்கு 15% விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் இறக்குமதிக்கு இந்த அடிப்படை சுங்க வரி உயர்வு பொருந்தாது. இதனால் இந்த வரி உயர்வு சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.