ஐப்பான் டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக்! தனுஜா ஜெயராமன்
ஜப்பான் நாட்டில் டோயோட்டாவின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் முடங்கியது. டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யப்பட்ட போது, வெளியில் இருந்து வரும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் டோயோட்டா நிறுவனத்துடைய கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா அந்நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் புதிய கண்டுப்பிடிப்புகளில் முன்னோடியாக உள்ளது.
எத்தனால், ஹைட்ரஜென், எலக்ட்ரிக் வாகனத்துடன் சோலார் பேனல் இணைப்பு என கார் தயாரிப்பில் பெரும் மாற்றத்தை செய்துள்ளது. ஆனால் இந்த வதந்தி பெரியதாக வெடிக்கும் 24 அசம்பிள் லைன்களும் முடங்க சைபர் அட்டாக் காரணமில்லை ஆனால் இதற்கான சரியான காரணத்தை கண்டுபடிக்க ஆய்வு செய்ய உள்ளோம் என ஜப்பான் டோயோட்டா செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.