திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஃபஹத் ஃபாசில் ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. புஷ்பா , விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மலையாள நடிகர் பகத் பாசில். இதுவரை சுமார் 50 படங்களில் அவர் நடித்துள்ளார்.
தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் மலையான இயக்குனர் பாசிலின் மகன். நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது திருமண நாளான்று ரூ.2.70 கோடி மதிப்புள்ள லாண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 சொகுசு கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார். ஏற்கனவே, ஃபஹத் தன் வீட்டில் போர்ச், மினி கன்ட்ரிமேன், லம்போகினி உரூஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 740ஐ உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வாங்கியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
