வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி விமானம் தாமதம்!
டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. டெல்லி விமான நிலையத்தில் டெல்லியிருந்து புனே செல்லும் விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜிஎம்ஆர் அழைப்பு மையத்திற்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்த்து இறக்கிவிடப்பட்டனர்.
அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள விமானத்தில் மூன்று வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவை ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக மர்ம பொருள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறகு அந்த விமானம் தனியாக கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
விமானத்தில், கட்டாய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.