மயிலு …. மயிலு தான்..! | தனுஜா ஜெயராமன்
தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் ஶ்ரீதேவி. தமிழிலிருந்து இந்திக்கு சென்று அங்கும் முதலிடம் பிடித்து வெற்றிக்கொடி நாட்டியவர். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். எத்தனையோ சிறந்த வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தயாரிப்பாளார் போனிகபூரை திருமணம் செய்த பிறகு 1997-ல் சினிமாவை விட்டு விலகி குடும்ப பொறுப்பை ஏற்கப்போவதாக அறிவித்தார்.
250-க்கும் அதிகமான படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். கன்னடத்தில் 6, தமிழில் 71, தெலுங்கில் 81, மலையாளத்தில் 26, இந்தியில் 70 படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவிக்கு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு, கல்யாண ராமன், ஜானி, மீண்டும் கோகிலா படங்கள் பெரும் புகழை தேடித்தந்தன. 90களில் தனித்துவமான ஸ்டைலின் மூலம் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஶ்ரீதேவி நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் திரையரங்குகளில் அவருடைய ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். ரஜினியும், ஸ்ரீதேவியும் 22 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணைந்து நடித்த 6 படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது அது மட்டுமல்லாமல் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்தது. மேலும் இவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வசூலிலும் பட்டையை கிளப்பியது.
2013ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி ஸ்ரீ தேவியை மத்திய அரசு கவுரவப்படுத்தியது. அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி. தான் நடித்த பல படங்களில் ஹீரோவை விடவும் அதிக சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி, இவர் மரணம் அடைந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது இழப்பை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். பல மொழிகளில் நடித்துள்ள ஸ்ரீதேவி இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையல்ல. நடிகை ஶ்ரீதேவியின் 60 வது பிறந்த நாளினை முன்னிட்டு புகைப்படத்துடன் டூடுல் வெளியிட்டு பெரும் கவுரவப்படுத்தியுள்ளது