சந்தானத்தின் “கிக்” பட டீசர்!!!

 சந்தானத்தின் “கிக்” பட டீசர்!!!

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் சந்தானத்தை வைத்து “கிக் “ படத்தினை இயக்கிவுள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார்.இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் சந்தானம், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். ‘கிக்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒருவமுழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.   இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...