பிக்பாஸ் சீசன் 7 ப்ரமோ எப்போ தெரியுமா?

டிவி ரசிகர்களின் மோஸ்ட் பேவரிட் நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பிக்பாஸ் ரசிக பெருமக்களை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் சில வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 7 போட்டிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டதாகவும் அவர்களுடைய அதிகாரப்பூர்வமற்ற தகவலாக பெயர் பட்டியலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர் பட்டாளங்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவரான ஷர்மிளா, ரேகா நாயர், குக் வித் கோமாளி சரண், நடிகர் பப்லு பிருதிவிராஜ், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஆகியோர் கலந்து கொள்ளலாம் என ஜோசியம் சொல்லி வருகிறார்கள் பலர்.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இதனை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. எது எப்படியோ பிக்பாஸ் ரசிகர்கள் சீசன் 7 நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...