மனைவியை பிரிகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? வைரல் செய்தி …!

 மனைவியை பிரிகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? வைரல் செய்தி …!

உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து செய்தியை பகிர்ந்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல வித யோசனைகள் நிறைய உரையாடல்களுக்பு பிறகே கடினமான இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

ஏற்கனவே டிரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...