விக்ரம் ப்ரபுவின் “இறுகப் பற்று”

 விக்ரம் ப்ரபுவின் “இறுகப் பற்று”

பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை பர்ஸ்ட் லுக்  சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளார். இவர்களுடன் விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத்தொடும் இசையை தந்துள்ளார். கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளும் உண்டு. கோகுல் பெனாய்ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர்சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

‘இறுகப்பற்று‘ செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...