ஆடிப்பெருக்கு || விவசாயமும் மக்கள் வழிபாடும்
ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு. கிராமங்களில் இதனை ஆடி 18 ஆம் பெருக்கு என்று கொண்டாடுவர். ஆடிப் பெருக்கு என்பது தண்ணீரின் உயிர்களை நிலைநிறுத்தும் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஆறுகளில் மக்கள் பயன்பாட்டிற்காகப் படித்துறைகள் இருக்கும். அவை 18 படிகளைக் கொண்டிருக்கும். ஆடிப்பெருக்கன்று தான் விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். அதனால் இன்றைய நாளில் மக்கள் ஆறுகளை வணங்கிப் புனித நீராடுவர். காவிரி நதி பாயும் பகுதிகளில் இவ்விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் மழைக்காலத்தின் தொடக்கம். இம்மாதத்தில் அதிக மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் கரை புரண்டு ஓடும். மேலும் காவிரியில் நீர் பெருகும். எனவே தான் இந்நாளை வரவேற்கும் விதமாகவும், காவிரி அன்னையை வணங்கும் விதமாகவும் ஆடிப்பெருக்கு நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் விவசாயிகள் வயல்களில் விதை விதைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த மாதம் விதைப்பதற்கும், விதைகளை நடுவதற்கும் மற்றும் தாவரங்களுக்கு நன்மை பயக்கும். பருவமழை, இயற்கை தாய் மற்றும் காவிரி நதிக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். இந்த நன்னாளில் இயற்கை அன்னை அம்மன் தெய்வ வடிவில் வழிபடப்படுகிறார்.
இந்நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால் செல்வ வளமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் ஆடிப்பெருக்கு அன்று கன்னி தெய்வத்தை வழிபடுவோருக்குச் சிறந்த கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.
இந்நாளில் புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வதும், சுமங்கலி பெண்கள் தாலி பிரித்தும் போடுவது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதுபோல் குழந்தை பாக்கியம் வேண்டி இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மொத்த்தில் தஆடிப்பெருக்கு திருவிழாவானது இயற்கை அன்னைக்கும், பருவமழைக் கடவுளுக்கும் தடையின்றி தண்ணீர் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.