சிவக்குமார் பாரட்டிய “அநீதி”….!

 சிவக்குமார் பாரட்டிய “அநீதி”….!

வசந்தபாலனின் இயக்கத்தில்
அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் “அநீதி”.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான “அநீதி” திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘s pictures வைத்திருந்தது.

இந்நிலையில், “அநீதி” திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...