மாஸ் காட்டிய ரஜினி … 15 செகண்டில் விற்று தீர்ந்த பாஸ்…!!!

 மாஸ் காட்டிய ரஜினி … 15 செகண்டில் விற்று தீர்ந்த பாஸ்…!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்க பட நிறுவனம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் சும்மாவா என்ன… எப்பவுமே நான் டாப்பு என வழக்கம்போலவே மாஸ் காட்டியுள்ளார் ரஜினி.

ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இதற்கான பதிவு 24.7.23 மதியம் 1 மணிக்கு தொடங்கியது. ஆனால், பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நிமிடத்தில் விற்று தீர்ந்து விட்டது. இதனை மகிழ்ச்சியுடன் படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...