“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.

 “காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

மேலும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள அந்த பாடலை படத்தில் தமன்னா பாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது..இந்த பாடல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாகவுள்ளா நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...