டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை || பேரதிர்ச்சி

 டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை ||  பேரதிர்ச்சி

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இன்று காலை 6.45 மணிக்கு நடை பயிற்சியை முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்தவர் யாரும் எதிர்பாராத நிலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தவர், 6.50 மணிக்கு மெய்க்காப்பாளர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துbகாண்டுள்ளார். பல மாதங்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்தவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தூக்கமின்மைக்காக மாத்திரையைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2009ல் ஐ.பி.எஸ். பேட்ஜில் பணியில் சேர்ந்தார். இவர் நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா, சாத்தான்குளம், சாத்தான்குளம் இரட்டைக் கொலை உள்ளிட்ட வழக்குகளை சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்.பி.யாகவும் பணியாற்றியவர். பின்னர் சென்னை அண்ணாநகரில் முணை ஆணையராகப் பணியாற்றி வந்தார் பதவி உயர்வாக இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்றார்.

எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலையில் தனது வீட்டில் இருந்தபோது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

“கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக் காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறப்பட்டுள்ளது.

கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்டதாகும். நான்கு மாவட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தது போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகுமார் தற்கொலைக்குக் காரணம் மனஅழுத்தமே என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் “டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்குப் பணி சுமை காரணமல்ல” என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இன்று உடல் கூறாய்வு முடிந்ததும் மாலையில் விஜயகுமார் உடல் தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும், இதற்கான ஏற்படுகளை இவரது குடும்பத்தினர் செய்துவருகின்றனர் எனவும் தெரிகிறது. இவரது மனைவி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...