மீண்டும் “ஹரா” வாக மைக் மோகன்…!!! – by தனுஜாஜெயராமன்
கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் திரைப்படம் ‘ஹரா’
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள படம் ‘ஹரா’.நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிப்பதால் “ஹரா” படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் மோகன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோகன் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் என்றும் தந்தை மகள் சென்டிமென்ட் கொண்ட இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஏற்கனவே தெரிவித்திருந்தார்
தற்போது படம் முடிவடைந்து வெளியாக உள்ள நிலையில் பாம் குறித்து மேலும் சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படத்தில் அவருடன் மோதும் வில்லன் பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.
‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். “எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.