எச்.வினோத் உடன் இணையும் உலக நாயகன்…!!! – by தனுஜா​​ஜெயராமன்

 எச்.வினோத் உடன் இணையும் உலக நாயகன்…!!! – by தனுஜா​​ஜெயராமன்

எச்.வினோத் உடன் இணையும் உலக நாயகன்…!

கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன.
இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கிறார். மேலும் அந்த திரைப்படத்தை தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் உலக நாயகன் கமல்.

இதில் பல முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். அதில் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் 233ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் பட வியாபாரத்தை முன்கூட்டியே தொடங்கி விட்டனர்.

அதில் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு முந்தைய டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இதன் ஒடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தியன் – 2க்குப் பிறகு கமல்ஹாசன் வேறு சில இயக்குநர் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை அவரது ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...