வெளியானது ஐசிசி உலகக்கோப்பை அட்டவணை-2023

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் பத்து அணிகளும் ரவுண்டு ராபின் அடிப்படையில் தங்களுக்குள் பல போட்டிகளை நடத்தும் இதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிச் சற்றுக்குச் செல்லும். இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா வங்கதேசம் அணிகள் புனேவில் மோதுகின்றன. இதனை தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இதன்பிறகு இந்திய அணிக்கு ஒரு வாரம் போட்டிகள் இல்லை.அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது

நவம்பர் இரண்டாம் தேதி இந்திய அணி தகுதிச்சுற்றுக்கு வெல்லும் அணியுடன் மும்பையில் விளையாடும். நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நவம்பர் 11ஆம் தேதி இந்திய அணி தகுதி சுற்றில் இருந்து வரும் இரண்டாவது அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது. இந்தப் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இந்திய அணி ஐந்து அல்லது ஆறு அணிகளையாவது வீழ்த்த வேண்டும்.

இதில் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் இருந்து வரும் இரண்டு அணிகளை வீழ்த்திவிட்டு பெரிய அணிகள் இரண்டை இந்தியா வீழ்த்தினால் அரை இறுதிச் சற்றுக்கு எளிதாக சென்று விடலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டின் வடிவமே மாறிவிட்டது. அனைத்து அணி வீரர்களும் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்கள். இதனால் இந்தியாவுக்கு இந்த பயணம் எளிதாக இருக்காது . நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக பிசிசிசி மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மும்பையில் நடந்து வரும் பிரம்மாண்ட விழாவில் ஐசிசி நிர்வாகத் தலைவர் ஜியோஃப் அலார்டைஸ், பிசிசிஐ ஜெயலாளர் ஜெய் ஷா, இந்திய ஜாம்பவான் சேவாக், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. அதில் அக்.15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடக்கும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதேபோல் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் மும்பை வான்கடே மைதானம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இறுதிப்போட்டி மீண்டும் அகமதாபாத் மைதானத்திலேயே நடத்தப்படவுள்ளது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.12ஆம் தேதி வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.

குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ஒரு லட்சம் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பை மைதானங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது. அது என்னவென்றால், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதும் சூழல் ஏற்பட்டால் அந்தப் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இல்லாமல், வேறு அணிகளுடன் இந்தியா அரையிறுதியில் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!