பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!

 பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!

“ஃபர்ஹானா” திரைப்படம் வெளியான தினத்தில் இருந்தே பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதளங்கள் மூலம், ஃபர்ஹானா படக்குழுவினருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேற்று நடிகர் சிவகுமார் ஃபர்ஹானா படக்குழுவினரை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏற்கனவே “பர்ஹானா” திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. மேலும் இப்படம் நல்ல அனுபவத்தை தந்ததாகவும், உரையாடல்கள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்தப்படைப்பு ஃபர்ஹானா. 6 முறை தொழுவது, வீட்டு பணிகளை பார்ப்பது, வேலைக்கு செல்லும் பெண்களை பார்த்து ஏங்குவது என அன்றாடம் அவரின் நாட்கள் நகர்கிறது. அவரின் கணவர் கரிம்(ஜித்தன் ரமேஷ்) மாமனார் வைத்திருக்கும் கடையில் அவருக்கு உதவியாக இருக்கிறார். பெரியதாக வியாபாரம் இல்லாததால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதில் தொடங்கி அன்றாட குடும்ப செலவு என பணம் தேவை அதிகம் இருக்கிறது. இதனால் ஃபர்ஹானா வேலைக்கு செல்ல நினைக்கிறார். பர்ஹானாவுக்கு அவரின் கணவர் துணையாக நிற்க, கால் சென்டர் வேலையில் சேர்கிறார்.

குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறது. இந்த நேரத்தில் தான் பர்ஹானாவின் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலை வருகிறது. அதற்காக அதிக பணமும் தேவைப்படுகிறது. இதை சமாளிக்க கால் செண்டரில் அதிக இன்சென்டிவ் கிடைக்கும் பிரிவுக்கு ரேவதியிடம் (அனுமோல்) கெஞ்சி சேர்கிறார். அதன் பின்பு பர்ஹானா வாழ்க்கையையே தலைகீழாக மாறுகிறது. கடைசியில் அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுப்பட்டாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க ஃபர்ஹானாகவே வாழ்ந்து கைத்தட்டல்களை அள்ளுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தடைகளை மீறி வேலைக்கு செல்லும் காட்சிகள் தொடங்கி , நவ நாகரீகமான மற்ற பெண்கள், அவர்களின் உடைகளை ஏங்கி பார்ப்பது, மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிய பின்பு அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கணவரிடமும் சொல்ல முடியாமல் அழுது தீர்ப்பது என ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய தூண். அதிகம் பேசாமல் மனைவியை புரிந்து கொள்ளும் கணவராக, அவருக்கு புது செருப்பு மாட்டிவிட்டு அனுப்பி வைக்கும் எழை கணவராக ஜித்தன் ரமேஷ் யாதார்த்த நடிப்பை தந்து இருக்கிறார். இவர்களுடன் குக் வித் கோமாளி சக்தி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் செல்வராகவன். இசை கலைஞன் தயாளனாக அவரின் குரலை வைத்தே மொத்த படமும் நகர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், தயாளனின் முகத்தை பார்க்கும் காட்சி, ரசிகர்களை சீட்டுக்கு நுனியில் செல்ல வைக்கிறது. அதே போல் படத்தின் இண்டர்வெல் பிளாக், பின்னணி இசை ஆகியவை முழுயான த்ரில்லர் அனுபவத்தை தருகின்றன.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...