மலர்வனம் இதழ் வழங்கிய ‘சாதனை மகளிர்’ விருதுகள்
மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மலர்வனம் சார்பாக விருது அளித்து, வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்கள். மலர்வனம் ஆசிரியர் ராம்கி வரவேற்புரை ஆற்றினார்.
‘ரத்ன கமலம்’ விருது (நாட்டியம்) – முனைவர் லட்சுமி ராமஸ்வாமி; ‘சிறந்த அன்னை’ விருது ஸ்ரீமதி என்.சகுந்தலா; ‘சேவை சுடர் ஒளி’ விருது திருமதி சாம்பவி சங்கர்; ‘உதவும் குரல்கள்’ விருது திருமதி ரேஷ்மி & திரு. விநோத்; ‘சங்கீதச் சுடர் ஒளி’ விருது செல்வி வித்யாலட்சுமி தேவநாதன்; ‘சிறந்த மருத்துவ, நாட்டிய ஆராய்ச்சி
சாதனையாளர்’ விருது டாக்டர் நித்யகல்யாணி; ‘இசை லய சுடர் ஒளி’ விருது செல்வி வி. சிவரஞ்ஜனி; ‘சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்’ விருது திருமதி ரம்யா ராமச்சந்திரன்; ‘சிறந்த பின்னனி பாடகி’ விருது செல்வி ஸ்நேகா நாராயணசுவாமி;
‘சிறந்த பஜன் மண்டலி குரு’ விருது திருமதி வி.கே. விசாலாட்சி (ஜெயஸ்ரீ); ‘சிறந்த எழுத்தாளர்’ விருது திருமதி லதா ரகுநாதன்; ‘இசை லய சுடர் ஒளி’ விருது செல்வி வி. சிவப்ரியா; ‘சிறந்த வளரும் ஓவிய, சிற்பக் கலைஞர்’ விருது திருமதி எஸ்.கே. வித்யா; ‘கோல அரசி’ விருது திருமதி சந்தியா தியாகராஜன்
விருது பெற்ற தேவதைகளுக்குப் பொன்னாடை, நினைவுப் பரிசு, சான்றிதழ் மற்றும் சாய் சங்கரா கேட்டரர்ஸ் வழங்கிய காஞ்சி பெரியவரின் போட்டோவும் வழங்கப்பட்டது. சீதா ராம்கி நன்றியுரை ஆற்றினார்.