உலக மருந்தாளுநர் தினம்

 உலக மருந்தாளுநர் தினம்

உலகளாவிய சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், உலக மருந்தாளுநர் கள் தினம் செப்டம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கான சரியான மருந்தைக் கண்டறிதல், மருந்துகளை நிரப்பு தல் மற்றும் மருந்துகளின் காலாவதி தேதிகளைக் கண்காணித்தல் ஆகிய வற்றுக்கு அவர்கள் பொறுப்பு. சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனைத்து மருந்தாளுநர்களையும் அங்கீகரிக்க இந்த நாளை உருவாக் கியது. அனைத்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விஞ்ஞானிகளுக்கான முன்னணி சர்வதேச அமைப்பான சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவுவதற்காகச் செயல்படுகிறது.

மருந்தாளுநர்களுக்காக இவ்வளவு செய்துவரும் அமைப்புக்கு அஞ்சலி செலுத்த விரும்புவதாக அன்றைய படைப்பாளிகள் கூறினர். இந்தக் காரணத்திற்காக, அவர்கள் 1912, செப்டம்பர் 25 அன்று உலக மருந்தாளுநர் கள் தினத்தைக் கொண்டாடுவதற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

உலகம் முழுவதும், நான்கு மில்லியன் மக்கள் இந்தத் துறையில் பணி யாற்றுகிறார்கள். உலக மருந்தாளுநர்கள் தினம் உலகளாவிய ஆரோக்கி யத்தை மேம்படுத்துவதில் மருந்தாளர்கள் ஆற்றும் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது. மருந்தாளுநர்கள் மற்றும் அவர்களின் பங்கு பற்றிய பொது அறிவை வளர்ப்பதே உலக மருந்தாளுநர்கள் தினத்தில் பகிரப்படும் உலக ளாவிய நோக்கமாகும்.

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி யின் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் பெ.முத்துசாமி அவர்களிடம் பேசினோம்.

பேராசிரியர், முனைவர் முத்துசாமி

வணக்கம் சார், ‘மருந்து, மாத்திரைகளை மருத்துவ ரீதியாக எப்படித் தயாரிக்கிறார்கள்?’
“ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து மூலப்பொருட்கள் (API) இருக்கின்றன. அந்த மூலக்கூறுகளின் அடிப்படையில்தான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப் படுகின்றது.
காய்ச்சல் இருந்தால் காய்ச்சலைக் குறைக்கும் தன்மையுடைய ஆன்ட்டி பைரடிக்ஸ் (Antipyretics) மருந்துகள் கொடுக்கப்படும். இது உடலின் அதிகப் படியான வெப்பத்தைக் குறைக்கிறது. பாராசிட்டமல் என்கிற மருந்துதான் அதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருட்களு டன் மற்ற துணைப்பொருட்களைச் (Excipient) சேர்ப்போம்.

அதன் பிறகு இந்த மாத்திரை நீரில் கரைகிறதா என்று பரிசோதிக்கப்படும். அதன்பிறகு மாத்திரையில் போதுமான அளவு அதன் மூலப்பொருட்கள் இருக் கிறதா என்று தரம் பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைகளைக் கடந்துதான் எல்லா மாத்திரைகளும் விற்பனைக்கு வருகிறது. இப்படி ஒவ் வொரு மாத்திரை, மருந்துக்கும் அதன் மூலப்பொருட்களை வைத்து அதன் செல்ஃப் லைப் நிர்ணயிக்கப்படுகிறது.

மாத்திரை என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் காலாவதிக்கான காலம் வழங்கப்படும். சில மருந்து மூலப்பொருட்களுக்கு ஸ்திரத்தன்மை இருக்காது என்பதால் ஒரே வருடம் அனுமதி வழங்கப்படும்.

உதாரணமாக, சீதோஷ்ண நிலையைத் தாங்காது என்பதால் விட்டமின் மாத் திரைகள் எல்லாம் ஒரு ஆண்டுக்கு மேல் காலாவதியாகிவிடும். காரணம் சில மாலிக் அன்ஸ்டேபிள் மாலிக் என்பார்கள்.

சில மாலிக் மெட்ரரிடன்சல் (Metronidazole). ரொம்ப நாளைக்கு கெடாமல் இருக்கும். அதற்கு  (Expiry date) அதிகபட்சமாக மூன்று வருடம் வரைக்கும் அங்கீகாரம் வழங் கப்படும். அதேபோல் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளுக்கு இரண்டு வருடங்கள் ஆயுட்காலம் வழங்கப்படும். இப்படி எல்லா மாத்திரை களுக்கும் செல்ஃப் லைஃப் ஸ்டெடி செய்துதான் மாத்திரை, மருந்துகளை வெளி விற்பனைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

‘கேப்சூல்கள் மற்றும மருந்துகள் பற்றிச் சொல்லுங்கள்?’

கேப்சூல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மூலப்பொருட்களைச் சேர்த்து ஒன் றுக்கு மேற்பட்ட நோய்களுக்கு ஒரே மருந்தாக வழங்கலாம். ஒரு நோய்க்கு இரண்டு, மூன்று மருந்துகளைத் தற்போது வழங்க முடியும். தற்போதைய இந்த முறை மருத்துவத் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதற்கு காம்பினேஷனுக்கு மத்திய அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் அனுமதி பெறவேண்டும்.
மருந்தியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருந்து ஒருவர் உடலில் முழுவதும் போய் சேருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வார்கள். அதற்கேற்பத்தான் மாத்திரையின் (Doses) அளவுகளை நிர்ணயிக்கிறார்கள்.

திரவ மருந்துகளில் ஒன்று சிரப் (Syrup), இன்னொன்று எலிசிர் (Elizir). இருமல் மருந்து என்றால் அதில் மூன்றுவிதமான மருந்துகள் கலந்து தயாரிக்கப் படுகிறது. திரவ மருந்தைப் பொறுத்தவரை ஓரிரு வருடங்கள்தான் ஆயுட் காலம் வழங்கப் படுகிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...