விஷ்ணு பரிவர்த்தன விஜய துவாதசி விரதம் -இன்று
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சண்டி விரதம் எனப் பல விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்திற்குத் தனி மகத்துவம் உள்ளது.
சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகாவிஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க் கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். நாளை மாலை லட்சுமியுடன் மகா விஷ்ணுவுக்குப் பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. இந்த திதியில் விரதம் இருந்தால் தீவினைகள் எல்லாம் அழிந்துவிடும்.
இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விஷ்ணு வின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தரும் இந்தப் பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம். இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். நாளை பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக்கொள்ள முடியும்.
ஏகாதசி அன்று இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன் கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்குப் படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றி களையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக் கிறார்கள்.
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் கடுமை யாகப் பாடுபட்டனர். அப்போது ஏகாதசி திருநாளில் அமிர்தம் வெளிப் பட்டது. அந்த அமிர்தம் மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக் கப்பட்டது. எனவேதான் ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளை கள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருளால் பெறலாம்.
விரத முறை
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜைகள் மற்றும் அனு ஷ்டானங்களைச் செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. உண்ணா நோன்பு இருக்க இயலாதவர்கள் வேகவைத்த உணவைச் சாப்பிடாமல் பால் பழங்கள், அவல் போன்றவற்றை உட்கொண்டு விரதத்தைக் கடைப்பிடிக்க லாம்.
குளிர்ந்த நீரைக் குடிக்காமல் துளசி தீர்த்தம் குடிக்கலாம். ஏகாதசி விரதத்தின் போது எக்காரணத்தையும் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. முந்தைய நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும் உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக் கியங்களையும் பெறுவார்கள்.