ஐ.டி.ஐ.யில் புதிய தொழிற்கல்வி முறையைத் தடுக்கவேண்டும்! | வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை.

“ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில்முனைவோர் களாக, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் செல்பவர்களாக,பொதுத் துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிய லாம்.

ஆனால், தற்போது அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத் துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரியும் வகையிலும், புதிய தொழிற்கல்வி முறையை அமல் படுத்த ஒன்றிய அரசு முயன்று வருகிறது. இத்தகைய நடவடிக்கை, இளைஞர் களுக்கு, வருங்காலத் தொழிலாளர்களுக்கு எதிரானது ஆகும்.

அதாவது, தற்போது ஐ.டி.ஐ.களில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர் களுக்கு 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான பாடத்திட்டங்களை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.டி.ஐ. பயிற்சி பெறும் பயிற்சியாளர் களைக் கொத்தடிமைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களைக் குறைத்து ஆணை பிறப்பித் துள்ளது.

பாடத்திட்டங்களுக்கான கால அளவு குறைக்கப்பட்டதோடு,  அத்தியாவசிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு குறைவான அளவோடு   வர்த்தகக் கோட்பாடு பாடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய முறை அமல்படுத்தப்பட்டால் ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கணிதம், தொழில்நுட்ப வரை படம், இயந்திர அறிவியல் போன்ற எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரிவார்கள். இது முற்றிலும் துறையை, பயிற்சியின் தரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக் கையாகும்.

எனவே, புதிய தொழிற்கல்வி முறையைத் தடுத்து நிறுத்தவதோடு, தொழிற் பயிற்சித் துறையின் நோக்கத்தை முழுமையாக அமல்படுத்தி, தமிழ்நாடு தொழிற்துறையில் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்பு உருவாக்கிடவும்,  இத் துறையின் பயிற்சி மேம்படவும் தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிற்சியாளர்களுக்கு இயந்திரங்களில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுவரும் இத் துறையில் திறன் பெற்ற உதவியாளர் முதல் முதல்வர் வரை உள்ள சுமார் 40 விழுக்காடு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பயிற்சியாளர்களுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்திடவும், தொழில் நிறுவனங்கள் தொழில்பழகுநர் பயிற்சியில் பணிபுரியும் பயிற்சியாளர்களைப் பணி நிரந்தரம் செய்திடவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்றார் வேல்முருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!