கர்ப்பிணிப் பெண்கள் அசைவம், வறுத்த மீன்களைச் சாப்பிடலாமா?
இன்றைய அவசர உலகில் உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணும் நிலை தற்போது இல்லை. கிடைப்பதை உண்கிற நிலைதான் உள்ளது. ஆனால் கர்ப்பிணிப் பெண் கள் கட்டாயம் தேர்ந்தெடுத்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உண்ணாக்கூடாத, உண்ணக்கூடிய உணவு கள் பற்றி தாய் சேய் நல சிறப்பு மருத்துவர், டாக்டர் ஜெயஸ்ரீ சர்மாவிடம் பேசினோம்.
கர்ப்பிணிப் பெண்கள் அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த மீன் உணவு களைச் சாப்பிடலாமா?
“பொதுவாக பொரித்த உணவுகள் செரிமானம் ஆக, கூடுதலான நேரம் எடுக்கும். நிறை மாதத்தில் வயிறு அழுத்தப்பட்டு அதன் கொள்ளளவு குறைவாக இருப்ப தால் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அப்போது இதுபோல செரிமானத்திற்கு கூடுதல் நேரம் எடுக்கக்கூடிய உணவுப் பொருட்கள் ஜீரணிப்ப தில் சிக்கல் ஏற்படுத்தும். அத்துடன் பொரித்த உணவு வகைகள் ஏராளமான மசாலா சேர்த்து செய்யப்படுவது வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகமாக்கும். மற்றும் நம் உடலில் உள்ள நீரை இழுத்துக் கொள்ளும்போது மலம் கழிப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். எனவே பொரித்த உணவு வகைகளை கர்ப்பிணிப் பெண்கள் குறைவாக உண்ணுவது நல்லது.
நிறைமாதத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிரசவ வலி ஏற்படலாம் என்ற நிலையில் உணவு வகைகள் பெரும்பாலும் எளிதில் ஜீரணமாகக்கூடிய வகையாகவும், அதிலும் நீர் கலந்த, கஞ்சி போன்ற உணவு வகைகளும் நல்லது.
எல்லா உணவு வகைகளுமே காய்கறிகள் ஆகட்டும் அல்லது அசைவ மாகட்டும் டீப் ஃபிரை என்று சொல்லக்கூடிய எண்ணெயில் பொரிக்கப்பட்டால் அதனுடைய பெரும்பாலான விட்டமின் சத்துக்களை இழந்துவிடும்.
நிறைமாதத்தில் சிக்கன் 65 அல்லது பொரித்த மீன் உணவு போன்றவற்றை எடுப்ப தால் எந்தவிதமான நலன்களும் இல்லை. ஆனால் அவை ஜீரணத்தில் கோளாறு களை ஏற்படுத்தி அந்தச் சமயத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் மேலும் அசௌ கரியத்தை ஏற்படுத்தலாம். எனவே விரும்பினால் குறைவான அளவு உண்ண லாம்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம். இது உடல் முழுமைக்கும் வேண்டிய ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. கர்ப்பிணிக்கு இரத்த சோகை இருந்தால் தேவையான ஆக்ஸிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்கா மல் போகின்றது. பொதுவாக கர்ப்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இரத்தம் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் பொதுமான அளவு இரும்புச் சத்து கிடைக்காத நிலையில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி குறைய தொடங்கும். அப்போது மருத்துவர் இதன் பாதிப்புக்கேற்ப மருந்துகள் அல்லது உணவு முறைகள் பரிந்துரைப்பார்.
இந்த உணவு முறைகளை தொடர்ந்து எடுத்து வந்தால் ஹீமோகுளோபின் குறை பாட்டை தடுக்கலாம். உணவில் வைட்டமின் பி, சி, இரும்பு, ஃபோலிக் அமிலம் போன்ற உணவுகள் சேர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் பழங்களில் ஆரஞ்சு மற்றும் மாதுளை சேர்க்கலாம். இது ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கலாம். மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உதவுகிறது. மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இத னோடு கிவி, பீச், திராட்சை, கொய்யா போன்ற பழங்களும் சேர்க்க வேண்டும்.
பருப்புகள் புரதத்தால் மட்டுமல்ல இரும்புசத்தும் கொண்டுள்ளன. தினசரி ஒரு கப் ஏதாவது ஒரு பருப்பு வகைகள் சேர்ப்பது நல்லது பருப்புகளில் பட்டாணி, பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு மற்றும் புரதம் நிறைந்தவை. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் தடுக்க முடியும்.
கர்ப்பிணிக்கு தினசரி 27 மில்லி கிராம் அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேற்கண்ட உணவுகளையெல்லாம் கர்ப்பத்தின் தொடக்கம் முதலே எடுத்து வந்தால் கர்ப்பகாலம் முழுமையும் ஹீமோகுளோபின் அளவு குறை யாமல் தடுக்கலாம்.
உடற்பயிற்சி அதிக ஆக்ஸிஜனுக்கான தேவையை பூர்த்தி செய்ய அதிக ஹீமோ குளோபினை உற்பத்தி செய்யும். அதனால் மருத்துவருடன் கலந்தா லோசித்து மிதமான பயிற்சி செய்யலாம்.