அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராக முதல் தமிழ்ப் பெண் நியமனம்

 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராக முதல் தமிழ்ப் பெண் நியமனம்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானியான கலைச்செல்வி நல்லதம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

1942ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன. அதில் 4600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப நிபுணர்கள் என 14,000க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். முதல் நிலை விஞ்ஞானி யாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கலைச்செல்வி.

நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) செயல்படு கிறது. தன் னாட்சி பெற்ற அரசு அமைப்பான இது, நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சி யில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக காரைக்குடியில் உள்ள சி.ஐ.எஸ். ஆர். – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய இயக்குநரான கலைச்செல்வி நல்லதம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். பிறகு, உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், காலியாக உள்ள சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநர் பதவிக்கு கலைச்செல்வி நல்லதம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.  இப்பதவியில் நியமிக்கப்படும் முதல் பெண் இவர்.

கலைச்செல்வி நல்லதம்பி, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் அம்பா சமுத் திரம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர். அங்குள்ள பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். அதுதான் கல்லூரியில் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவியதாக அவர் கூறுகிறார். லித்தியம் அயன் பேட்டரி குறித்த ஆராய்ச்சிக்காக அவர் புகழ்பெற்றவர். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட் டுள்ளார். பெரும்பாலும் மின்வேதியியல் குறித்தே ஆராய்ச்சிகளை மேற்கொண் டுள்ளார். அவை ஆற்றல் சேமிப்பு எந்திரங்கள் வடிவமைப்புக்குப் பெரிதும் பயன் பட்டு வருகிறது. தற்போது அவர் சோடியம், லித்தியம் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெப்பாசிட்டர்கள் உள்ளிட்ட வற்றில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசின் நோக்கமான மின்சார இயக்கத்துக்கான வழிமுறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கலைச்செல்வி தற்போது, காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ கலைச்செல்வி அப்பதவியில் இருப்பார்.

முதல் பெண் தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள நல்லதம்பி கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செய லாளர் பதவியையும் கூடுதலாக வகிக்க உள்ளார்.

அவரது நியமனம் அமைச்சரவையின் நியமனக்குழுவால் அங்கீகரிக்கப்பட் டுள்ளது. இந்தப் பதவி காலமானது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லத் தக்கது. பதவியின் பொறுப்பு ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த உத்தரவு வரை, எது முந்தையதோ அது அமலில் இருக்கும். இவர் தனது முதல் ஆராய்ச்சிப் பயணத்தை காரைக்குடியில் இதே நிறுவனத்தில்தான் தொடங்கினார்.  

கலைச்செல்வி நல்லதம்பி 125-க்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். ஆறு காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

மத்தியஅரசியன் சார்பு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் இயக்குநராகப் பெறுப்பேற்றுள்ள கலைச்செல்வி நல்லதம்பிக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...