ஏமன் நாட்டு நரகக் கிணறு மர்மம் விலகியது


ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும் இது 367 அடி ஆழ மும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு.
இந்தக் கிணற்றில் ஆவிகள் உள்ளது, அதன் அருகில் சென்றால் அந்தக் கிணறு ஆட்களை இழுத்துக்கொள்ளும் அதனால் இதனை நரகத்தின் கிணறு என்று அப்பகுதியினர் அழைத்துவருகின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது. ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த மர்மங்கள் உடைத்தெறிந்து இது இயற்கையான கிணறு. இதில் மாயமும் இல்லை மந்திரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நேரடி ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துக் காட்டி உள்ளனர்.
சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்ம மாகவே இருந்தது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 10 பேர் முதல்முறையாக கிணற் றுக்குள் கயிறு மூலம் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன் உள்ளே அழகான நீர் வீழ்ச்சி உள்ளது என கூறியுள்ளனர். மிக அதிகளவில் பாம்புகள், பூச்சிகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இதைக் கண்டறிந்து தெரிவிக்க ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள், இந்த மர்மக்குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் தைரியமாக இறங்கினர். அதன் உள்ளே நீண்ட குகை போன்று காணப்பட்டது அதோடு, உள்ளே சினிமா காட்சி களில் காட்டப்படுவது போல் அழகிய நீர் வீழ்ச்சியும் தென்பட்டது. அதோடு, ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்தன. இவை ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

நீண்ட காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘இந்த மர்மக் குழியில் எந்த பூதமும் இல்லை. ஏமனின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளுக்கான இடமாக இது திகழும். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த மர்மக்குழி உருவாகி இருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்’ என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.