தேளைவிட விஷமானது தேளி மீன்
ஆப்ரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட தேள் போன்றும் கவ்வும் உறுப்பு கொண்ட மீன் வகையைச் சேர்ந்ததுதான் தேளி மீன். இது ஒரு அடிக்கு மேல் வளரக் கூடி யது. ஈய வெண்மை நிறமுடைய இது விஷமீன் வகையைச் சேர்ந்தது. சந்தை யில் விலை குறைவாகக் கிடைகிறது என வாங்கி விடாதீர்கள்! நீங்கள் ஒருவர் உண்டால், சந்ததியே பலியாகும். உஷாராக இருங்கள்.
இது மொய்மீன், பூ விரால், தேளி விரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர் களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன். எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு கூறப்படுகிறது.
கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும், கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படு கிறது. இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு ராட்சசத்தனமாக வளரக்கூடியது. இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு மீன்களான அயிரை, சிறு கெண்டை வகைகள், கெளிறு, உழுவை போன்ற மக்கள் விரும்பும் மீன் இனங் களையும் அழிக்கின்றன. மனிதர்கள் மட்டுமின்றி அதனை விரும்பி உண்ணும் நீர்ப்பறவைகளுக்கும் பாதிப்பை உருவாக்குகின்றன.
இந்த மீன் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் தேவையற்ற குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டை யில் கொட்டப்படுகின்றன.
குறுகிய காலத்தில் குறைந்த செலவில் கொழுத்து அதிக எடையில் வளரும் இம் மீன் பல இடங்களில் மீன் கடைகளில் கடல் கெளுத்தி என்ற பெயரில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தேளி மீன்கள் மற்ற மீன்களைப்போல் அல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழும் தன்மை கொண்டது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பிறகும் வண்டல் மண் ணுக்கு அடியில் சென்று காற்றைச் சுவாசித்து பல மாதங்கள் மயங்கிய நிலை யில் இருக்கும். மீண்டும் மழை பெய்து குளம், குட்டைகளுக்குத் தண்ணீர் வந்ததும் மண்ணுக்குள் புதைந்திருந்த தேளி மீன்கள், வழக்கம்போல குளத்தில் வாழ ஆரம்பித்துவிடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தான் இந்த மீனை வெட்டும்போது அது இரண்டு துண்டாக ஆனபோதும் இறுதி வரை உயிருடன் இருக்கிறது.
மீனவர்கள் இந்த மீனைச் சாகடித்து வெட்ட மாட்டார்கள். உயிருடன் வெட்டுவார் கள். இந்த மீன் செத்துவிட்டால் விஷயமாக மாறிவிடும் என்பதால் இதை உயிருடன்தான் விற்பார்கள். செத்த மீனை வாங்கிச் சாப்பிட்டால் மரணம் சம்ப விக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் சிலர்.
இந்த மீன் வளர்ப்பு பல வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் பல வற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது
இந்த மீனை உயிருடன் சாப்பிடுவோருக்குப் பலவிதமான தோல் நோய்கள், ஆண் மைக்குறைவு, புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. தேளி மீனைக் கண்டால் தேளைக் கண்டதுபோல் விலகிச்செல்லுங்கள்.