பங்குச்சந்தையில் ஏன் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன?

 பங்குச்சந்தையில் ஏன் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன?

பங்குச்சந்தையே இந்தியப் பொருளாதாரத்தின் மூச்சுக்காற்றாகும். இந்தியா வில், பாம்பே பங்குச்சந்தை (Bombay Stock Exchange – BSE)  மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange – NSE) என இரண்டு பங்குச் சந்தைகள் மூலமே அனைத்துவிதமான பங்குச்சந்தை பரிமாற்றங்களும் நிகழ்கின்றன.

இந்தப் பங்குச்சந்தைகளில் பல குறியீடுகள் உள்ளன. அவற்றில் முக்கிய மானது BSEன் சென்செக்ஸ் (Sensex) குறியீடு (1979ல் நிறுவப்பட்டது) மற்றும் NSEன் நிஃப்டி (Nifty) குறியீடு (90 களின் மத்தியில் நிறுவப்பட்டது).

BSE இந்தியாவில் அதன் சந்தை மூலதனத்தின்படி முதலிடத்தில் இருக் கின்ற 30 நிறுவனங்களைப் பட்டியலிடுகிறது. அதேபோல் NSE இந்தியாவில் அதன் சந்தை மூலதனத்தின்படி முதலிடத்தில் இருக்கின்ற 50 நிறுவனங் களைப் பட்டிய லிடுகிறது. இந்த BSE மற்றும் NSE இரண்டிலுமே முதல் 30 இடவரிசையில் பட்டியலிடப்படும்  நிறுவனங்கள்  அதே  நிறுவனங்கள் தான்.

BSE மற்றும் NSE பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை மூல தனத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களின் அடிப்படையிலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்ற இறக்கங்களைக் காண்கின்றன. மேலும், நிறுவனங்கள் தங்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அவற் றின் பங்குகளின் விலையை நிகழ்காலத்திலேயே நிர்ணயிப்பதனாலும் இந்த ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக, BSE மற்றும் NSE பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் நிதி செயல்திறன், விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய பங்குகளின் எண் ணிக்கை, அதற்கான தேவை, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், அரசியல்ரீதியான முன்னேற்றங்கள், தேசிய மற்றும் உலகளாவிய பொரு ளாதாரம் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தே உள்ளதால், இந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்ற இறக்கங்களைக் காண்ப தென்பது தவிர்க்க முடியாததாகின்றன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...