வில் ஸ்மித் அடித்தது சரியா? | கோலிவுட் கோகிலா
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு.
சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்’ படம் எடுக்கப்பட்டது.
மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ₨20 கோடி நஷ்டம் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
டைரக்டர் ராஜமவுலியை அன்ஃபாலோ செஞ்சேனா? நடிகை ஆலியா பட் மறுப்பு.
ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உட்பட பலர் நடிச்சிருக்காய்ங்க . இந்தப் படம் பல ஊர்களில் நல்லாவே ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதில் நடிகை ஆலியா பட்டுக்கு சிறிய ரோல் கொடுத்தார் என்றும் அவர் காட்சிகளை ராஜமவுலி அதிகமாக வெட்டிவிட்டார் என்றும் கோபத்தில் இருக்கும் ஆலியா பட், சமூக வலைதளத்தில் அவரை அன்ஃபாலோ செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாச்சு.
அதோடு, தனது அடுத்த படமான ’பிரம்மாஸ்த்ரா’ படத்தின் புரமோஷன்களில் இறங்கி உள்ள அலியா பட் ’ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும் நீக்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதிருப்தியில் இருந்ததால்தான் அலியா பட், இப்படி செய்தார் என்றும் கூறப்பட்டுச்சு.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஆலியா பட்.
இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பது:
என் இன்ஸ்டாகிராமை அடிப்படையாக வைத்து நீங்களாகவே எந்த அனுமானத்தையும் செய்ய வேண்டாம். எப்போதும் அதில் என் பழைய வீடியோக்களை மாற்றி அமைப்பது வழக்கம். அப்படித்தான் அதை செய்தேன். ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் அந்த சீதா கேரக்டரிலும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்ததையும் விரும்பினேன். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோருடன் நடித்ததும் பிடித்திருந்தது.
இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன். இப்போது ஏன் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்றால், ராஜமவுலியும் அவர் குழுவினரும் வருடக் கணக்கில் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அதனால், இந்தப் படம் பற்றிய எந்த தவறான செய்தியையும் என்னால் அனுமதிக்க முடியாது என்பதால்தான்.
அப்படீன்னு ஆலியா பட்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆஸ்கர் விழா நடந்த பொதுவெளியில் வில் ஸ்மித் ஒருவரை அடித்தது சரியா என்ற விவாதம் இன்னமும் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க கூடவே அலோபீசியா நோய் -னாஅ இன்னா அப்படீன்னு பலரும் தேட துவங்கி இருக்கிறார்கள்.
இந்தநிலையில் நடிகை சமீரா ரெட்டி கூட இந்த நோய் பற்றியும் இதனால் தான் பாதிக்கப்பட்டிருந்தது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில், ‘இப்போது பலரின் கவனத்திற்கும் வந்திருக்கும் ஆஸ்கர் சம்பவம்தான் இந்த பதிவை நான் பகிர காரணம். நம் எல்லோருடைய வாழ்விலும் தனிப்பட்ட பிரச்சினைகள், போராட்டங்கள், அதில் இருந்து மீண்டு வந்திருக்கோம். அதை நாம் பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நம் நம்பிக்கையை கடத்த முடியும். அதைத்தான் நான் செய்ய போகிறேன். அலோபீசியா ஏரியாட்டா நோய் என்றால் அது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை. அது கூந்தல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் தலையில் வழுக்கை பிரச்சினையை ஏற்படுத்தும். கடந்த 2016-ம் ஆண்டு என் பின் தலையில் இரண்டு இன்ச் வழுக்கையை கண்டறிந்தேன்.
இதை கையாள்வது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அலோபீசியா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் நிச்சயம் அது அவர்களை உடல் ரீதியாக சோர்வாக்காது. மேலும் இது தொற்றும் தன்மை கொண்டதும் அல்ல. ஆனால், இதனை உணர்வு ரீதியாக ஒருவர் சமாளிப்பது கடினம்’ என்கிறார் சமீரா.
இது குறித்தான சிகிச்சையில் இருந்தபோது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்வுக்கு பிறகு மெதுவாக முடி மீண்டும் அந்த இடத்தில் வளரும் மற்றும் தனக்கு கார்டிகோ ஸ்டீராய்டு ஊசி மூலம் உதிர்ந்த இடத்தில் மெதுவாக முடி மீண்டும் வளர தொடங்கியதாக சமீரா அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நிச்சயம் சரியாகும் என்பது கிடையாது. அதேபோல, இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதும் தெரியாது. இதில் மூன்று வகைகள் உள்ளன. மொத்த முடியும் இழந்து தலை மொத்தமும் வழுக்கையாகும் alopecia totalis, தலையின் பகுதியில் ஆங்காங்கே முடி உதிர்வும் வழுக்கையும் ஏற்படுத்தும் alopecia ophiasis, தலையை தாண்டி உடலின் மற்ற பகுதிகளிலும் முடி உதிர்வை ஏற்படுத்தும் alopecia universalis என்பதுதான் அது.
ஆனால், இப்போது எனக்கு நல்ல ஆரோக்கியமான முடிகள் இருக்கின்றன. இதை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் எனக்கு திரும்ப வரலாம். ஹோமியோபதி சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த பரபரப்பான உலகத்தில் மீது கருணையுள்ளவராக இருங்கள்’ எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சமீராவின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு இந்த அலோபீசியாவால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களது அனுபவங்களை சமீராவோடு பகிர்ந்து வருவதை இந்த பதிவில் பார்க்க முடிகிறது.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ படத்தின் பாகம் இரண்டு உருவாகப் போகுதாமில்லே!
2014-ஆம் வருஷம் கார்த்திக் சுப்புராஜின் டைரக்ஷனில் உருவாகி சூப்பர் ஹிட்டடிச்ச படம் ‘ஜிகர்தண்டா’. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை கதிரேசன் தயாரிச்சிருந்தார்.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் குறும்பட இயக்குனராகவும், பாபி சிம்ஹா கேங்ஸ்டராகவும் மிரட்டியிருந்தார். கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதோடு சிறந்த துணை நடிகர் மற்றும் எடிட்டிங்கிற்காக இரு தேசிய விருதும் கிடைச்சுது.
இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதல் பாகத்தை தயாரித்த கதிரேசன் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுது.
மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல்.