தண்ணீர் சுரக்கும் அதிசய மண் பானை
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரி கிராமத்தின் விடஸ்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தத்தா மந்திர். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகக் கருதப்படும் இக்கோயில் மூலவராக மகாவிஷ்ணு உள்ளார்.
இந்தக் கோயில் அருகே ‘பீம் கா மட்கா’ (பீமன் மண்பானை) உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மண்பானையில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் குறைவதே இல்லை. சுமார் 5 அடி ஆழம் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்துதான் தினந்தோறும் மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1913ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இகோயிலை பல பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஆய்வு செய்தும் மண் பானைக்கு எப்படித் தண்ணீர் வருகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களின் வனவாச காலகட்டத்தில், அவர்கள் வழிபட இக்கோயில் கட்டப்பட்டதாகவும், மகாவிஷ்ணுவுக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்வதற்காக பீமனால் உருவாக்கப்பட்டதே இந்த மண் பானை என்றும் உரி கிராம மக்கள் நம்புகின்றனர்.