“கோத்தபய ராஜபக்சே மகிந்த ராஜபக்சே அரசே எங்களைக் கொள்ளாதே!” -இலங்கை மக்கள் அலறல்
கோத்தபய ராஜபக்சே – மகிந்த ராஜபக்சேவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 31.03.2022 காலை 10.00 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாட்டில் கவன யீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
கோத்தபய ராஜபக்சே மகிந்த ராஜபக்சே அரசே எம்மை கொள்ளாதே, விலை உயர்த்தி சாவடிக்காதே, நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்காதே, சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை விற்காதே, மீண்டும் மீண்டும் கடன் வாங்கி எங்களை அடைவு வைக்காதே, தள்ளாதே தள்ளாதே, பட்டினி சாவில் தள்ளாதே போன்ற பல கோசகங்களை எழுப்பினர்.
மேலும் விலை உயர்வினைத் தடுத்து நிறுத்து, கட்டுப்பாட்டு விலையினை கொண்டு வா, உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளாதே, தாராள மயம் தனியார் மயம் தந்த பரிசுகளே இன்றைய அவலநிலை, என்ன வளம் இல்லை இந்த நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் அந்நிய நாட்டில், அரசியலமைப்பை மாற்ற வேண்டும் தேசிய பொருளாதாரம் உருவாக வேண்டும், நேற்று அங்கர் 980 ரூபா இன்று 1900 ரூபாவிற்கும் இல்லை, கோதுமை மா நேற்று 85 ரூபா இன்று 190 ரூபாவிற்கும் இல்லை, கடனுக்குள் தள்ளியோர் உல்லாச வாழ்வு, நாட்டு மக்கள் பட்டினிச் சாவு போன்ற வசனங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிவாயு சிலிண்டர், மின்சாரம், அடுப்பு, மண்ணெண்ணெய் போன்றவைக்கு தற்போதும் வரிசையில் நிற்கின்றனர். ஆனால் அவை இல்லை என்பதை சித்தி ரிக்கும் வகையில் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் போராட் டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர், அரசி யல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 70க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந் தனர்.