தில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எப்படி உள்ளது?

 தில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எப்படி உள்ளது?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க தில்லி செல்லவிருக்கிறார்.

தில்லியில் தி.மு.க. கட்டி எழுப்பியிருக்கும் அண்ணா கலைஞர் அறிவாலயம்தான், தற்போது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. எத்தனையோ கட்சிகளுக்கு அங்கு பெரிய பெரிய கட்சி அலுவலகங்கள் இருந்தாலும்கூட தி.மு.க.வின் இந்த அலுவல கம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அகில இந்திய அளவில் இப்போது முக்கியமான கட்சியாக மாறி யுள்ளது தி.மு.க. இப்படிப்பட்ட பின்னணியில்தான் பிரம்மாண்டமான  அண்ணா கலைஞர் அறிவாலயத்தை நிர்மானித்துள்ளது தி.மு.க.

டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில்தான் தி.மு.க. தனது இந்த புதிய மாளிகையை எழுப்பியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டே இதற்கான இடத்தை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது. ஆனால் போன வருஷம்தான் கட்டுமானப் பணியை தி.மு.க. ஆரம்பித்து இப்போது கட்டி முடித்து விட்டது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
3 மாடிகளுடன் கூடியதாக உருவாகியுள்ள இந்தக் கட்டடத்தை கட்சி அலுவலகம் என்று சொல்வதைவிட குட்டி அரண்மனை என்று சொல் லலாம். அந்த அளவுக்கு பிரமாண்ட தூண்கள், அழகிய வடிவமைப்பு என அழகு மாளிகையாக இது உருவெடுத்துள்ளது.

தில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறக்கவுள்ளதை ஒட்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து….

“அறிவாலயம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, சென்னையில் உள்ள கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம்தான். ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம்.


திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதன்முதலில் தலைமை நிலையமாக அமைந்தது, சென்னை ராயபுரத்தில் உள்ள அறிவகம். அதன்பின், தேனாம்பேட்டை அன்பகம். பிறகு, அரசினர் தோட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, கழக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க அரசு நம்முடைய கழக அலுவலகத்தை சூறையாடுவதுபோல பொருட்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டது.
நெருக்கடி நெருப்பாறுகளைக் கடந்து வந்த இயக்கமல்லவா இது!
கழகத்திற்கென நிலையான போதுமான இடவசதி கொண்ட தலைமை நிலையம் அமைக்க வேண்டுமென நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் சூளுரைத்து, கழகத்திற்காக 1972-ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் அண்ணா சாலையில் வாங்கப்பட்டிருந்த 86 மனை (கிரவுண்டு) நிலத்தில் அண்ணா அறிவாலயத்தை அழகும் கம்பீரமுமாக அமைத்தார்.


13 ஆண்டுகாலம் தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கழகத் தொண்டர்கள் கொள்கையில் புடம் போட்ட தங்கங்களாக இருந்தனர். அண்ணா அறிவாலயம் அமைப்பதற்காக அன்றைய காலத்தில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்ற நிலையில், தலைவரின் சொற்களைக் கட்டளையாக ஏற்று, நிதியைக் குவித்தனர். மாவட்டக் கழகங்கள், ஒன்றிய நகர கழகங்கள், கிளைக் கழகங்கள், கழகத்தின் துணை அமைப்புகள், சார்பு அமைப்புகள், கழக நிர்வாகிகளின் தனிப்பட்ட பங்களிப்பு என ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைக்கப்பட்டு, ஒவ்வொரு செங்கல்லும் கழக உடன்பிறப்பு களின் பெயர் சொல்லும் உறுதிமிக்க கல்லாக அமைந்து, எழில் மிகுந்த முறையில் உருவானதுதான் நம் உயிர்நிகர்த் தலைவர் எழுப்பிய அண்ணா அறிவாலயம்.
உடன்பிறப்புகளின் உணர்வில் எழுந்த அந்த எழில்மிகு கட்டடத்திற் கான பங்களிப்பாக மாநில இளைஞரணி சார்பில் அதன் செயலாள ராக இருந்த உங்களில் ஒருவனான நான் திரட்டித் தந்த நிதி, 3 லட்ச ரூபாய்.
1987-ஆம் ஆண்டு கழகத்தின் முப்பெரும் விழாவினையொட்டி, செப்டம்பர் 16-ம் நாள் அண்ணா அறிவாலயம் திறப்பு விழா நிகழ்வு, மாபெரும் ஊர்வலத்துடன் நடைபெற்றது.
கழக மாவட்ட அமைப்புகளும் பல்வேறு துணை அமைப்புகளும் பங்கேற்ற அந்த ஊர்வலத்தில் இளைஞரணியினர் வெள்ளைச் சீருடை அணிந்து, ராணுவ மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். பட்டாளம் நிகர்த்த அந்த அணிவகுப்பை, நான் தலைமையேற்று நடத்தினேன்.
கம்பீரமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்த அந்த அணி வகுப்பிற்குப் பிறகு, கழகத்தின் ஊர்வலங்கள், ‘பேரணி’ எனப்பெயர் பெற்றன.
பெயருக்கேற்றாற்போல ஒவ்வொரு ஊர்வலமும் அதன்பின் பேரணி யாகத் திகழ்ந்தன.
அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவில் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “அண்ணன் நமக்கு பலமான அடித்தளம் அமைத்த காரணத்தால்தான், எதிர்ப்புக் கணை களை முறியடித்து, கழகம் வானளாவ உயர்ந்து நிற்கிறது.
கழக உடன்பிறப்புகளின் உழைப்பும் தியாகமும்தான் இங்கு அண்ணா அறிவாலயமாக அழகுற மிளிர்கிறது” என்றபோது, ஒவ்வொரு உடன் பிறப்பின் உள்ளத்திலும் உணர்ச்சியலைகள் பரவின. திராவிட இயக் கத்தின் கொள்கைகள் நெஞ்சில் பதிந்தன.
அதன்பின், 1988-ல் தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணி சென்னை குலுங்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்றபோது, ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலை வர்கள் அண்ணா அறிவாலயத்தைப் பார்வையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞரின் ஆற்றல் கண்டு அதிசயித்தனர்.
தலைமைக் கழகத்தின் நிர்வாகப் பணிகளுக்காக உருவான அறி வாலயத்தில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும் ஏடுகளை யும் கொண்ட பேராசிரியர் ஆய்வு நூலகம், வெற்றிச் செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலைஞர் அரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
பின்னர், திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக அறிந்துகொள் ளும் வகையில் ‘கலைஞர் கருவூலம்’ அமைக்கப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அதனைத் திறந்து வைத்தார்.
அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல. இயக்கத்தின் கொள்கை யும் உடன் பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட லட்சிய மாளிகை!
அப்படிப்பட்ட ஒரு திராவிட மாளிகையாக டெல்லிப் பட்டணத்தில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எழுந்து நிற்கிறது.
உயிர்நிகர் தலைவர் கலைஞரின் சிந்தனையில் உருவான கட்டடங் கள் போலவே, 3 தளங்களைக் கொண்ட டெல்லி அறிவாலயமும் திராவிடக் கட்டட அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
உயரமான நான்கு தூண்களைக் கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா, கலைஞர் இருவரது மார்பளவு சிலை, கழக நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகை யில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தங்குவதற்கான அறை என முத்தமிழறிஞரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா கலைஞர் அறிவாலயம் அழகுற அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கழகக் கிளை அமைந்துள்ள இடங்களில் சொந்தமாகக் கட்டடம் கட்டி, அதன் ஒரு சாவியைத் தன்னிடம் தரவேண்டும் என்பது பேரறிஞர் அண்ணாவின் விருப்பம்.
பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது ஹோட்டலில் தங்காமல், கழக அலுவலகத்தில் தங்கி, தனது தம்பிகளுடன் உரையாட வேண்டும் என்பது அவர் எண்ணம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா மறைந் தாலும் அவர் எண்ணம் மறைந்துவிடாதபடி சென்னையில் அவர் பெயரில் அறிவாலயம் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் பிறகு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் சொந்தக் கட்டடங்கள் அழகுடனும் வசதியுடனும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது, இந்திய மத்தியத் தலை நகரில் அண்ணா கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியிருக் கிறோம்” என்றார் ஸ்டாலின்.

திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கான அறை முதல் மாடியில்தான் உள்ளது.
2வது தளத்தில் பிரமாண்டமான நூலகம் உள்ளது. செய்தியாளர்கள் அறையும் நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. செய்திகளை அங்கிருந்தபடியே உடனுக்குடன் அனுப்புவதற்கு தேவையான இணையதள வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.
3வது அறையை கிட்டத்தட்ட 5 நட்சத்திர ஹோட்டல் போல வடிவ மைத்துள்ளனர். தமிழகத்திலிருந்து வரும் கட்சிப் பிரமுகர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தங்குவதற்குத் தேவை யான அறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் டெல்லி யில் உள்ள பிற கட்சியினர் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இந்த கட்டடத்தை சூப்பராக உருவாக்கியுள்ளது தி.மு.க.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...