தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 8 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்
தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர்.
அதில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோஸியேஷனிலிருந்து 11 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர் வெள்ளி யும், 4 பேர் வெங்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்தப் போட்டியில் தமிழகத்தின் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் தலைவரும் உலக சாதனை யாளரும், தொழில் முறை குத்துச்சண்டை உலக சாம்பியனும் எம்.எம்.ஏ. தொழில் முறை பயிற்சியாளருமான பாலி சதீஷ்வர் கலந்துகொண்டு வீரர்களை வழிநடத்தினார்.
இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து குறைந்த அளவிலான வீரர்களே கலந்துகொண்டாலும் நிறைவான அளவில் பதக்கங்களை வென்றனர். அடுத்து நடக்கவிருக்கும் போட்டிகளில் எங்கள் எவர்லாஸ்ட பிரேவ் இன்டர்நேஷனல் பயிற்சிக்கூடத்திலிருந்து அதிக வீரர்கள் கலந்துகொண்டு அதிக பதக்கங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தருவோம்” என்றார் பாலீ சதீஷ்வர்.
இந்த நிகழ்வில் அண்மையில் சென்னையில் நடந்த உலக கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக சிறந்த இந்திய குத்துச்சண்டை வீரருக்கான விருதை திரு. பாலி சதீஷ்வருக்கு இந்திய மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஷீர் அவர்களால் வழங்கப்பட்டது.