இளம் சூழலியல் சாதனையாளர் தாரகை ஆராதனா

 இளம் சூழலியல் சாதனையாளர் தாரகை ஆராதனா

“எங்கள் வீட்டில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில்லை. நீங்களும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். நான் என் பகுதியைச் சுத்தம் செய் வதுபோல் நீங்களும் உங்கள் பகுதியைச் சுத்தம் செய்யுங்கள்” என்கிறார் மழலை மொழியில் தாரகை ஆராதனா.

எட்டு வயதாகும் தாரகை ஆராதனா இளம் வயது சூழலியலாளர், என்.ஐ.ஓ. எஸ். என்கிற திறந்தநிலைப் பள்ளியிலும், சமூக உறவு வேண்டும் என்பதால் பழைய மகாபலிபுரம், காரப்பாக்கம், எலன் ஷர்மா நர்சரி பள்ளியில் 2வது படிக்கிறார்.

கடலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துக்காக சமீபத்தில் கோவளம் முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவை 6 மணி 14 நிமிடங்களில் நிந்திக் கடந்து அசிசிஸ்ட் வேர்ல்ட் ரொக்கார்ட் மூலம் சாதனை படைத்திருக் கிறார். தாரகை ஆராதனாவே ஆழ்கடல் பாதுகாப்புப் பற்றிய விழிப் புணர்வு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசி னோம்.

உங்களுக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது?

என் அப்பா அரவிந்த் தருண்ஸ்ரீ சிறந்த ஸ்கூபா டிரைவிங் (Scuba diving) பயிற்சி யாளர். ஆழ்கடல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக என் அப்பா பத்தாண்டு களுக்குமுன் ஆழ்கடலில் திருமணம் செய்தவர். ஆழ்கடலில் உடற்பயிற்சி, ஆழ்கடலில் சைக்கிள் ஓடுவது, கடந்த 16வது வருடமாக சுதந்திர தினத்தன்று ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றி வருகிறார். இதுவரைக்கும் 15 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஆழ்கடலிலிருந்து பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றியிருக் கிறார்.

அப்பா சின்ன வயதிலிருந்து கடலுக்கடியில் செல்லும்போது என்னையும் அழைத்துப் போயிருக்கிறார். நான் பிறந்து மூன்றாவது நாளிலிருந்தே தண்ணீ ரில் இருக்கிறேன். வெளிநாட்டில்தான் குழந்தைகள் தண்ணீரில் மிக்கும் என்ப தில்லை. பயிற்சி தந்தால் நம் ஊரிலும் குழந்தைகள் மிதக்கும் என்பதற்கு நான் ஓர் உதாரணம்.  பிறகு ஒன்பது மாதத்தில் நீரில் மிதக்க ஆரம்பித்தேன். இரண்டு வயதில் நீந்தத் தொடங்கினேன்.

கொரோனாவுக்கு முன்பு கடலில் பிளாஸ்டிக்குகள் அதிகமாக இருந்தன. கொரோனாவுக்குப் பின்பு பிளாஷ்டிக் கழிவுகள் குறைவாக இருந்தன. ஆனால் முகக்கவசங்கள் அதிகமாக இருக்கின்றன. அதை அகற்றவேண்டும் என்றார் என் அப்பா. இந்த மாதிரி செயல்களில் அப்பாவுடனேயே நானும் உடனிருந்து பார்த்ததால் எனக்கு ஸ்கூபா டைவிங் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. ஆழ்கட லில் செல்லும்போது அதற்கான ப்ரீத் கவர், ஆக்சிஜன் சிலின்டர், கால் பட்டை களை அணிந்துகொண்டு ஆழ்கடலைச் சுத்தம் செய்வதிலேயும் கடற் கரையைச் சுத்தம் செய்வதிலேயும் சில ஊர்களில் பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றும்போதும் நான் அப்பாவுடன் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். இந்தப் பணியில் நான் மட்டுமே 600 கிலோ வுக்கு மேல் பிளாஷ்டிக் கழிவுகளை அகற்றியிருக்கிறேன்.

‘தற்போது நீரில், நிலத்தில், வானில் வாழும் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன’ என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். ‘அவற்றில் ஏதாவ தொன்றை நீ பாதுகாக்கத் தேர்ந்தெடுத்துக்கொள்’ என்றார் என் அப்பா. நான் அழிந்து வரும் ஆழ்கடல் அரிய விலங்கான கடல் பசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அந்தக் கடற்பசு இந்தியாவிலேயே எண்ணிக் கையில் 140தான் இருக்கிறது என்பது வருத்தமான செய்திதானே. அந்தக் கடற்பசுவைக் காப்பாற்ற சில பள்ளிகளுக்குப் போய் என் வயதொத்த மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விளக்கிப் பேசி வருகிறேன்.

இப்போது எனக்கு எட்டு வயது முடிந்துவிட்டு என்னால் நல்லா நீந்த முடி கிறது. இந்தச் சமயத்தில் கடலைக் காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வும் உலகச் சாதனையாகவும் இருக்கவேண்டும் என்று ஒரு சாதனை முயற்சியைச் செய்யச் சொன்னார் என் அப்பா. அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கோவளத்தி லிருந்து நீலாங்கரை வரை 19 கி.மீட்டரை 6 மணி நேரம் 19 நிமிஷம் வரை நிற்காமல் நீந்தினேன். ரொம்ப ஜாலியா இருந்தது. அதற்காக என் பெயர் அசிசிஸ்ட் வேர்ல்ட் ரொக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத் தில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் ஆழ்கடலைக் காப்போம் என்கிற முழுக்கத்துடன் சமுத்திரத்தை 2 முறை வலம் வருவேன்” என்றார் தாரகை ஆராதனா மழலைச் சிறப்பு மாறாமல்.

தாரகை ஆராதனாவின் தந்தை அரவிந்த் தருண்ஸ்ரீயிடம் பேசினோம்.

நீங்கள் எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?

என் அப்பா, அம்மா இருவருமே உடற்கல்வி ஆசிரியர்கள். எனக்கு கல்வியில் ஆர்வம் செல்லவில்லை. விளையாட்டு, உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் ஏற்பட் டது. அதனால் என்னை இந்தத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டேன்.  தற்போது ஆழ்கடலில் ஆய்வு செய்பவர்களுக்குப் பயிற்சி வழங்கும் ஸ்கூபா டைவிங் ஸ்கூல் புதுச்சேரியில் வைத்துள்ளேன்.

தமிழகக் காவல் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை போன்ற துறையைத் தேர்ந்த அதிகாரிகளுக்கு ஸ்கூபா டிரைவிங் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக் கிறேன். தீயணைப்புத்துறை என்றால் இறந்த உடல்களை மீட்பது, அமலாக் கத்துறை என்றால் கடலுக்குள் கள்ளக்கடத்தல் நடத்துவதைத் தடுத்தல், மரைன் போலீஸ் தீவிரவாதிகள் வராமல் இருப்பதைத் தடுப்பதற்குப் என்னா லான பயிற்சிகளைத் தந்துகொண்டிருக்கிறேன்.

என் மகள் தாரகை ஆராதனாவை குழந்தைப் பருவத்திலேயே அழைத்துப் போய் கடலில் நீந்தப் பயிற்சி கொடுத்தேன். ஆழ்கடலுக்குச் சென்று பிளாஸ்டிக் கழிவு களை நீக்கும்போதும், வீணான மீன்பிடி வலையில் கடல்வாழ் உயிரினங்கள் மாட்டி, நாங்கள் மீட்கும்போதும் அழைத்துப் போயிருக்கிறேன். அவருக்கு இந்தத் துறையில் என்னைப் போலவே அதீத ஆர்வம் இருந்ததைக் கண்டறிந்தேன். நான் எதையும் வலிந்து சொல்வதில்லை. ஆராதனாவே கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்டார். இதை மாதிரி ஆர்வத்துடன் வரும் இளம் பருவத்தினருக்கும், இளைஞர்களுக்கும் ஸ்கூபா டைவிங் பயிற்சி தரத் தயாராக இருக்கிறேன். என் நோக்கம் ஆழ்கடலை மாசு இல்லாமல் காக்க வேண்டும் என்பதுதான்” என்றார் அரவிந்த் தருண்ஸ்ரீ.

அகற்றிய குப்பைகள்
தாய் தந்தையுடன்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...