சென்னையின் 3வது பெண் மேயராக ப்ரியா ராஜன் தேர்வு

 சென்னையின் 3வது பெண் மேயராக ப்ரியா ராஜன் தேர்வு

வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரிலுள்ள 74வது வார்டில் வெற்றி பெற்றவர் ப்ரியா ராஜன். இவர் தாத்தா செங்கை சிவம். இவர் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.  28 வயதாகும் ப்ரியா எம்.காம். பட்டதாரி. கணவர் பெயர் ராஜன்.

சென்னை மேயர் தொகுதி பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கியிருந் தது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. தாயகம் கவி. கௌத்தூர் தொகுதி வார்டில் வென்ற நந்தினிதான் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்க விருந்தார். அது முதல்வர் தொகுதி என்பதாலும் இதுவரை தென்சென்னை யைச் சேர்ந்தவர்களே மேயராக இருந்துள்ளனர் என்பதாலும் வடசென்னை யில் பல பணிகளில் இருப்பதாலும் கொளத்தூர் தொகுதிக்கு அருகில் திரு.வி.க. நகர் இருப்பதாலும், ப்ரியா எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திமுக பாரம்பரியத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதால் இவரை முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்கவுள்ளார். 

துணை மேயராக தென்சென்னையைச் சேர்ந்த மகேஷ்குமார் தேர்ந்தெடுக்கப் பட உள்ளார். இவர் தி.மு.க.வின் செயற்குழு உறுப்பினர். சைதை தொகுதிக்கு உட்பட்டது.

ஒரு மேயர் பதவி கோவை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் 20 தொகுதிகளிலும் தி.மு.க.வே பதவியேற்க உள்ளது.  அதன் மேயர், துணை மேயர் பதவிகளுக்குத் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்லில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பதவி ஏற்க உள்ள னர். அதில் 16 பேர் பட்டியலினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கள் அனைவரும் இரவுக்குள் முடிவு செய்யப்பட்டு நாளை பதவி ஏற்பார்கள் என்று தெரியவருகிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.