பிரசன்னா ராமஸ்வாமி – நாடகத் துறைக்கு கிடைத்த தகுதியான விருது

 பிரசன்னா ராமஸ்வாமி – நாடகத் துறைக்கு கிடைத்த தகுதியான விருது

தமிழ் நாடகத் துறையில் தவிர்க்கமுடியாத பெயர் பிரசன்னா ராமஸ்வாமி.

சாதி, மதம், இனம், பால் வேற்றுமைகளினால் மனிதம் பிளக்கப்படுவது குறித்துக் கவலைகளையும், உரையாடல்களையும் தொடர்ந்து தனது நாடக ஆக்கங்கள், எழுத்துகளினூடே வெளிப்படுத்தி வருகிற ஆளுமை.

நான் அவரை ஒருமுறை சமூகச் செயற்பாட்டாளர் என்று குறித்தபோது, நானா என்று வியந்தவர். சமூகப்போராளி என்ற முத்திரையோ, தகவலோ அவருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை. சமூகம் என்பது அவருக்கு  முன்னுரிமையாக இருக்கிறது.

எல்லா இஸங்களின் வறட்டுவாத செக்டேரியன்களிடமிருந்து அவர் விலகி நிற்கிறார். நீதியின் பக்கம் என்று ஒன்றிருந்தால் அது சார்ந்து நிற்கிறார்.  இதுதான் நான் அறிந்த பிரசன்னா ராமஸ்வாமி.

துணுக்குத் தோரணமும், அல்ப சந்தோஷ ஹாஸ்யமும்தான் இங்கு நாடக இலக்கணம் என்று பெருவாரியானவர்கள் நம்புகிறார்கள். புராணங்களுக்கும் பழங்கதைகளுக்கும் ஒரு மரபுத் தொடர்ச்சி இருக்கிறது. சமூக நாடகங்களும் அரசியல் நாடகங்களும் காலப்போக்கில் ஓரஞ்சாரமாக நிகழ்வதாகிவிட்டன.

நிஜ நாடகம் என்ற மலர்ச்சி 80, 90களில் விரிந்தது. அதில் தமிழ் நாடக வெளியில் தனக்கான ஒரு சிறப்பிடத்தை நிறுவியிருக்கிறார் பிரசன்னா ராமஸ்வாமி.

இசையும் பாடல்களும் நாட்டியமுமான வடிவத்தில் சமூகத்தைப் பேசுவதன் மூலம் ஒரு புதிய அனுபவத்தை அவர் ரசிகனுக்கு வழங்குகிறார்.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், கூத்துப்பட்டறை முத்துசாமி போன்றோ ரின் கலை இலக்கியத் தோழமை இவருக்கு உற்சாகமான படைப் பூக்கத்தை நல்கியது. 20க்கும் மேற்பட்ட பன்மொழி நாடகங்களைத் தயாரித்து இயக்கி உலகமெங்கும் நிகழ்த்தியிருக்கும் பிரசன்னாவின் இன்னொரு முகம் – ஆவணப் பட இயக்குநராகப் பரிமாணம் காட்டுகிறது.

எழுத்தாளர் அசோகமித்ரனுடன்

இயல் துறையில் எழுத்தாளர் அசோகமித்ரன், திரைத்துறையில் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இசைத் துறையில் பாடகர் சஞ்சய் சுப்ரமணியம், நாட்டியத் துறையில் மாளவிகா சருக்கை என்று அவர்களைக் குறித்த ஆவணப் படங்களை இயக்கிப் பதிவு செய்தது குறிக்கத்தக்க ஒரு சிறப்புப் பணி.

தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, சங்கீத நாடக அகடெமி விருது, யூனிசெஃபின் லாட்லி விருது,  இந்திய சுதந்திரத்துக்கும் முந்தைய  நட்புறவு இயக்கமான – இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் ISCUF வழங்கிய சாதனையாளர் விருது, மாற்று நாடக இயக்கம் வழங்கிய பேராசிரியர் சே. இராமாநுஜன் விருது போன்ற அங்கீகாரங்களையடுத்து, ‘முத்தமிழறிஞர் கருணாநிதி பொற்கிழி விருது’ இன்றைக்கு இவர் கரங்களை வந்தடைந்திருக் கிறது. 16-2-2022 காலை, சென்னை புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்த கையோடு, நாடகத்துறையில் ஆற் றிய சேவைகளுக்காக பிரசன்னா ராம ஸ்வாமிக்கு இவ்விருதை வழங்கியிருக் கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2006இல் முரசொலி அறக்கட்டளை சார்பில் ‘கலைஞர் விருது’ தோழர் ஜெய காந்தனுக்கு வழங்கப்பட்டபோது, பல புருவங்கள் மேலெழும்பின. விருதின் சிறப்பு என்ன என்று கேட்கப்பட்டபோது, “எதிர்பாராத இடத்திலிருந்து எதிர் பாராத விதத்தில் கிடைத்த விருது என்பதே இதன் முதல் சிறப்பு!” என்றார் ஜே.கே. அது ஏனோ என் நினைவுக்கு வந்தது.

ஆமாம்தானே, விருது விருது என்று தெருவுக்குத் தெரு கூவியும், தடவியும், விலை பேசியும் வழங்கப்படுகிற காலகட்டத்தில் – அரசியல், கருத்து வேறுபாடு கள், விமரிசனங்கள் எல்லாவற்றையும் கடந்து, ஒரு விருது பாரபட்ச மற்று வழங்கப்படுவதும், பெறப்படுவதும் சிறப்பே ஆகும்.

தனது தகுதியால், அச்சிறப்பைப் பெற்றிருக்கும் பிரசன்னா ராமஸ்வாமி அவர் களுக்கு, என் முகநூல் நண்பர்களோடிணைந்து

வாழ்த்து மலர்கள் பொழிகிறேன்.

Rathan Chandrasekar

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...